TamilSaaga

அசுத்தமான மீன்களால் கொரோனா பரவியதா? “Jurong Fishery port” பகுதியில் நடந்தது என்ன? – MOH அதிகாரி விளக்கம்

சிங்கப்பூர் Jurong Fishery port பகுதியில் அசுத்தமான மீன்கள் மூலம் கோவிட் -19 பரவியது என எந்த ஆதாரமும் இல்லை என்று சுகாதார அமைச்சகத்தின் (MOH) மருத்துவ சேவை இயக்குனர் கென்னத் மாக் நேற்று (ஜூலை 20) தெரிவித்துள்ளார்.

Jurong Fishery port உடன் இணைக்கப்பட்டுள்ள தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்கியபோது, “நாங்கள் சாப்பிடும் மற்றும் அனுபவிக்கும் மீன்கள் நுகர்வுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம்.

நேற்று நண்பகல் நிலவரப்படி 314 தொற்றுகள் இந்த குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. துறைமுகம் மற்றும் ஈரச் சந்தைகளில் அதிக தொற்றுகள் உறுதியாகும் என சோதனை அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 அமைச்சகங்களுக்கான பணிக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கென்னத் மேக், Jurong Fishery port பகுதியில் கண்டறியப்பட்ட முதல் குழு தொற்றில் பைலோஜெனடிக் சோதனையின் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தோனேசியாவிலிருந்து பரவியதாக கண்டறியப்பட்ட தொற்றுகளில் இங்கு கண்டதைப் போன்ற வகையிலான தொற்று காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“எனவே இந்த COVID-19 நோய்த்தொற்று குழுமம் ஒரு கடல் வழி மீன்வள துறைமுகத்தின் மூலம் வந்திருக்க கூடும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

“இந்தோனேசிய அல்லது பிற மீன்பிடி படகுகளில் இருந்து மீன்களை துறைமுகத்திற்கு கொண்டு வந்திருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts