சிங்கப்பூரில் ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு, தற்போது சிங்கப்பூர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 60 மற்றும் 78 வயதிற்குட்பட்ட எட்டு நபர்களின் இந்த விசாரணை செப்டம்பர் 15, 2021, யுஷூனில் உட்லேண்ட்ஸ் போலீஸ் பிரிவின் அதிகாரிகளின் செயல்பாட்டின் விளைவாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனையின்போது 2,000 வெள்ளிக்கும் அதிகமான பணம், மொபைல் போன்கள் மற்றும் சூதாட்டம் தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
எட்டு பேரில், 62 மற்றும் 74 வயதிற்குட்பட்ட ஐந்து ஆண்கள் பந்தயச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகின்றனர். மேலும் இந்தச் சட்டத்தின்படி, சட்டத்திற்கு விரோதமாக பந்தயம் கட்டும் எந்தவொரு நபருக்கும் 5,000 வெள்ளிக்கு மிகாமல் அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
இந்த குற்றங்களில் ஈடுபடுவதாகக் கண்டறியப்படும் எந்தவொரு நபரும் 20,000 வெள்ளி தொடங்கி 2,00,000 வெள்ளிக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படுவார் மற்றும் ஐந்து வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவார். ரிமோட் சூதாட்டச் சட்டத்தின் கீழ் 60 முதல் 78 வயதுக்குட்பட்ட மற்றொரு இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகின்றனர்.
சட்டவிரோதமான தொலைதூர சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 5,000-க்கு மிகாமல் அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் சந்திக்க நேரிடும்.