திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் Indigo விமானத்தின் நேரம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த எக்ஸ்க்ளூஸிவ் தகவல் நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
அதன்படி, நேற்று (மார்ச்.30) முதல் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு கிளம்பும் விமானத்தின் நேரம், மாலை 6:40க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதாவது, இதற்கு முன் வரை நள்ளிரவு 12:15 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் கிளம்பும் இண்டிகோ விமானம், அதிகாலை 4:30 மணிக்கு சிங்கப்பூர் வந்திறங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது.
இப்போது, இந்த 12:15 மணி நள்ளிரவு விமானம், இனி தினம் மாலை 6:40 மணிக்குதிருச்சியில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு 1:45 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும் என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, நேற்று முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும், தனது சிங்கப்பூருக்கான பயண நேரத்தை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இதுநாள் வரை திருச்சியில் இருந்து இரவு நேரத்தில் சிங்கப்பூர் கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், நேற்று (மார்ச்.30) முதல் காலை விமானங்களாக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இனி அந்த இரவு விமானம், காலை 9 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். அதேபோல், மாலை 4 மணிக்கு சாங்கி விமான நிலையம் வந்திறங்கும். அதாவது, இதன் பயண நேரம் காலை 9 டூ மாலை 4 மணியாகும்.
நாளை ஏப்ரல்.1 முதல், தடுப்பூசி செலுத்தப்பட்ட அனைத்து பயணிகளும் Entry Approval இன்றி சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பயண நேரம் தற்போது முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள், இந்த புதிய நேர மாற்றங்களை தெளிவாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091