SINGAPORE: சிங்கையில் பணிபுரியும் தமிழக ஊழியர் ஒருவர், அலட்சியமாக வாகனத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, Kavya Kavya எனும் முகநூல் பக்கத்தில் இரண்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு வீடியோவில், வாகனத்தை இயக்கும் தமிழ் பேசும் ஊழியர், மொபைலில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு வண்டியை ஓட்டுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், 2.30 நிமிடங்கள் ஓடக்கூடிய மற்றொரு வீடியோ தான் பேசுபொருளாகியுள்ளது. அதில், அந்த ஊழியர் ஒரு கையில் வாகனத்தை இயக்கிக் கொண்டு, மறு கையில் ஃபோனில் பேசியபடி வருவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூடவே, ‘காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்’ என்ற பாடலும் ஒலித்திக் கொண்டிருக்க, அவர் ஃபோனில் சாவகாசமாக பேசிக் கொண்டே வண்டியை ஓட்டிச் செல்கிறார். சிறிது பிசகினாலும், நிச்சயம் விபத்து ஏறபடக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. அவருக்கு மட்டுமின்றி, எதிரே மோதும் வாகனத்தில் இருப்பவர்களுக்கும் இதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.
அந்த பேஸ்புக் பதிவில், இந்த ஊழியரின் பெயர் பாண்டியராஜன் என்றும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அந்த ஊழியரின் நலன் கருதி, நமது நமது தமிழ் சாகா அவருடைய முக அடையாளத்தை வெளியிடவில்லை. எனவே, அந்த வீடியோவையும் நாம் இங்கு பகிரவில்லை.
சிங்கப்பூரில் ஏற்கனவே இந்த 2022ம் ஆண்டில் பணியிட விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களும் தாறுமாறாக அதிகரித்து வருகின்றன. இதனால், சிங்கை அரசு பணியிடத்தில் போதிய பாதுகாப்புடன் செயல்படாத நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியை கைது செய்யும் அளவுக்கு தண்டனைகளை கடுமையாக்கி வருகிறது. இந்த சூழலில், இதுபோன்ற வீடியோ வெளியாக, பலரும் அந்த ஊழியருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இந்த வீடியோவை எடுத்தது யார் உள்ளிட்ட தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அந்த ஊழியர் கைது செய்யப்பட்டது உண்மை தானா என்ற தகவலும் இல்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியானால், அதனையும் தமிழ் சாகா சார்பில் வெளியிடுகிறோம்.
அதுமட்டுமின்றி, இந்த ஊழியர் குறித்த தகவல், வேறு யாருக்கும் தெரியும் என்றாலும், இந்த வீடியோ குறித்த உண்மை தன்மையும் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் +91 8269 418 418 என்ற தமிழ் சாகாவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பலாம். தகுந்த ஆதாரத்துடன் இருக்கும் பட்சத்தில் அதனையும் செய்தியாக வெளியிடுகிறோம்.