IHFS அதாவது Indian Hall of Fame Singapore பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது, IHFS என்ற இந்த அமைப்பு தகுதியுள்ள அனைத்து இந்திய நபர்களின் முயற்சிகளை அங்கீகரித்து, அவர்களை IHFSல் சேர்த்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை IHFS விருதுகளை வழங்கி அவர்களை கவுரவிக்கிறது.
IHFS என்ற இந்த பெருமைமிகு விருதுகள், சிங்கப்பூரில் வாழ்கின்ற இந்தியர்களிடையே அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை அங்கீகரித்து அவர்களை பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான IHFS விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன, மொத்தம் 14 இந்தியர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நமது சுதந்திரத்திற்கு பின் சிங்கப்பூர் அரசியலில் சிறப்பாக செயல்படத்திற்காக எஸ். ராஜரத்தினம் விருது அய்யா தனபாலனுக்கு வழங்கப்பட்டது.
நேற்றையதினம் சிங்கப்பூரில் உள்ள பொழுதுபோக்கு மன்றத்தில் சுமார் 150 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் செம்பவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அனைவருக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.
வெற்றிபெற்ற இந்தியர்களின் பட்டியலை காண…
சிங்கப்பூரின் அரசியல், மருத்துவம், கலை, தொண்டூழியம், நிதியாதரவு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் பங்கேற்று சாதித்த பலர் இந்த IHFS விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.