இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
ஏறத்தாழ ஓராண்டு காலமாக ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை என்ற பேச்சு நிலவி வந்த சூழலில் மத்திய அமைச்சர்கள் குழுவிலான பேச்சுவார்த்தையில் டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
டாடா-விற்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு. இதன் மூலமாக மீண்டும் ஏர் இந்தியாவானாது டாடா நிறுவனத்தின் கைகளில் வந்துள்ளது.
ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் டாடா நிறுவனத்திடம் விற்கப்பட்டாலும் ஏர் இந்தியாவின் சுமார் 14,718 அசையா சொத்துக்கள் அரசிடமே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனம் வசமாகியது. ஏர் இந்தியாவை வாங்கியதை தொடர்ந்து ரத்தன் டாடா இதனை வரவேற்றுள்ளார்.