சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளில் இருந்து வேலைக்காரங்களும் இல்லை குடியேறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மற்ற ஆசிய நாடுகளும் விட சிங்கப்பூரில் குடியேற பெரும்பாலானூர் விரும்புகின்றனர். இதற்கு காரணம் சிங்கப்பூர் மைகிரன்ட் தொழிலாளர்களை பெரிதும் வரவேற்கின்றது. அடிப்படை காரணமாக கருதப்படுவது சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டுமான வளர்ச்சியே ஆகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்ப வேலை வாய்ப்புகளும் அதிகரித்திருக்கிறது. வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதால் சிங்கப்பூரில் வாழ்பவர்கள், குடியுரிமை பெற்றவர்கள் என பல்வேறு தரத்தினருக்கும் வேலை கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்த பதிவில் வேலை வாய்ப்புகள் உயர்ந்ததை பற்றியும் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் ரீ என்ட்ரி பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழிலாளர்களை பணிய அமர்த்துவது இது குறித்து முடிவுகள் எடுப்பது, விவரங்களை வெளியிடுவது போன்றவற்றை MOM அமைப்பு பார்த்துக் கொள்கிறது. சிங்கப்பூரின் வேலை வாய்ப்புகளைப் பற்றி MOM அமைப்பு கூறியதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு கடைசி குவாட்டரில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதாவது மூணாவது குவாட்டரில் புதிய வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை 78 ஆயிரம் ஆக இருந்தது. ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு டிசம்பரில் 80 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் அதிகமானதாக கருதப்படுகிறது. இன்சூரன்ஸ், பினான்ஸ், மற்றும் ப்ரொபஷனல் சர்வீஸ் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பினான்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் வேலை வாய்ப்புகள் 5 ஆயிரத்திலிருந்து 7000க்கு அதிகமாக வேலை வாய்ப்பு உருவாக்கி இருக்கிறது. தொழில் முறை சேவை துறையில் 5 ஆயிரத்திலிருந்து 6000 திற்கு அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இதுபோன்ற துறைகள் அதிக சம்பளங்கள் கொடுக்கக்கூடிய துறைகளாகும். இதுவே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சரியான பாதையாகும்.
ஒரு சில துறைகளில் மறுசீரமைப்பு காரணமாக வேலை இழப்புகள் நடைபெற கூடும் ஆனால் இவை பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதி வேலைவாய்ப்பு வளர்ச்சி ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனினும் வேலை இழப்புகள் உற்பத்தி மற்றும் மொத்த வியாபார துறைகளில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த வேலை இழப்பு குறிப்பிட்ட துறைகளையே சார்ந்ததாக இருப்பதால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது.
இப்போது வேலை வாய்ப்புகளை பற்றி இன்னும் தெளிவாக, இந்த வேலை வாய்ப்புகள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களும் அதாவது நான் ரெசிடென்ஸும் வேலை பெற முடியும். பொதுவாக MOM அமைப்பு கருதுவது, கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதே போல் பினான்ஸ் மற்றும் பிரபஷனல் சேவை துறைகளில் சிங்கப்பூர் ரெசிடென்ஸ்களுக்கு வேலை வாய்ப்புகள் இருக்கும். இதன் மூலம் ஓர் ஆண்டில் அதாவது வரும் ஆண்டில் சுமார் 85 ஆயிரம் இருந்து 90 ஆயிரம் வரை வேலை வாய்ப்புகள் உருவாகும்.
சொல்லப்போனால் இந்த வேலை வாய்ப்புகள் அதிகமாக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அமையும். வெளிநாட்டுல இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்காக வருபவர்களுக்கு இது தக்க சமயமாக கருதப்படுகிறது. வேலை இழப்புகள் இந்த ஆண்டு பெருமளவில் மாற்றம் காணாது ஒரு இரண்டு சதவீதம் வேறுபடலாம். அவ்வாறு வேலை இழப்புகளை சந்திக்க நேரிட்டாலும் அவர்கள் ரீ என்ட்ரி மூலம் வேலை பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அடுத்த காலாண்டில் எண்ணிக்கைகளும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. வேலை இழந்தவர்கள் ஆறு மாத காலத்திற்குள் அடுத்த வேலையை தேடி இருக்க வேண்டும். இந்த கெடு வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு பொருந்தும். சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவர்கள் வேலை இழந்த அடுத்த நிறுவனத்தை தேடி வேலையை பெற வாய்ப்பளிக்கிறது.
சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவர்கள் வேலை இழந்த பின் வேலைக்கு ரீ என்ட்ரி செய்வது 2023 ஆம் ஆண்டு கடைசி காலங்களில் குறைந்து காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அப்படி இராது, வேலை இழந்தவர்களை திரும்பவும் வேலை கிடைக்க அரசு நிறுவனங்களும் பெரும் வாய்ப்பு அளிக்கிறது. எனவே இந்த 2024 ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கும், நிறுவனத்தினர்களுக்கும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நல்வாய்ப்பாக அமையும் என்ற MOM அமைப்பு அறிவித்திருக்கிறது.