சிங்கப்பூரில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தங்களை AIS – ல் இணைத்திருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம் ஐந்து தொழிலாளிகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள், இந்த சட்டத்திற்கு உட்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாசம் ஒன்றாம் தேதிக்குள் தங்களுடைய தொழிலாளர்களின் வருமான விவரங்களையும் மற்றும் தொழிலாளர் விவரங்களையும் IRAS க்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூரை பொறுத்தவரை ஒவ்வொரு தனி நபரும் அவர்களுடைய வருமானத்தை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் அவர்களுடைய நிறுவனம் அவர்கள் சார்பாக அவர்களுடைய வருமான மற்றும் தனிப்பட்ட விவரங்களை IRAS க்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து விடும். இதை நடைமுறைப்படுத்த AIS முறை பயன்பாட்டில் உள்ளது. இந்த AIS திட்டத்தின் மூலம் நிறுவனத்தினர் சமர்ப்பிக்கும் விவரங்களைக் கொண்டு ஒவ்வொரு தனி நபர் தொழிலாளிகளுக்கும் அவர்களுடைய வருமான வரி தொகையை IRAS நிர்ணயித்து அனுப்பிவிடும். இந்த AIS திட்டம், முழுமையாக மின்னணு முறையில் செயல்படுகிறது. அதாவது எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை. அதற்கு பதில் முழு விவரங்களையும் ஆன்லைனில் செலுத்தி அவர்களுடன் தொழிலாளர்களின் வரித்தகையை கணக்கிடலாம்.
இந்த 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 900 நிறுவனத்தில் தங்களுடைய தொழிலாளர்கள் வருமான விவரங்களை IRAS -க்கு சமர்ப்பிக்கவில்லை. இதனால் சிங்கப்பூர் அரசின் IRAS பெனால்டி அறிவித்துள்ளது. மேலும் இந்த பெனால்டி தொகை ஒரு மில்லியனையும் தாண்டலாம் என கணக்கிட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆண்டு தொழிலாளர்களின் வருமான விவரங்களை செலுத்த தவறிய நிறுவனத்தினர் வரும் மார்ச் மாசம் 1-ம் தேதிக்குள் தங்களுடைய தொழிலாளர்கள் IRAS -க்கு செலுத்த வேண்டும். இந்த பெனால்டி AIS-ல் தங்களை உட்படுத்திக் கொண்ட அனைத்து நிறுவனத்திற்கும் பொருந்தும்.
இந்த ஆண்டு 110,000 நிறுவனத்தினர் அதாவது AIS -ல் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய தொழிலாளர்களின் வருமான கணக்குகளை IRAS -க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட பின் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மற்றும் அவர்களுடைய நிறுவனத்திற்கும் வருமானவரித் துறையில் இருந்து வருமான வரி கட்டணத்துக்கான கடிதம் அனுப்பப்படும். இதுவே ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நடைமுறையாகும்.
ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 900 நிறுவனத்தினர் தங்களுடைய தொழிலாளர்களின் வருமான கணக்குகளை செலுத்தாததால் பெனால்டி அளவு 1 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெனால்டி விவரம், கடந்த ஆண்டு இந்த பெனால்டி தொகை சுமார் 1000 டாலர்கள் ஏற்றப்பட்டு தற்போது 5000 டாலர்கள் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இது அந்த நிறுவனத்தின் முக்கிய நபர்கள் 10,000 டாலர்கள் செலுத்த வேண்டி இருக்கும். அது மட்டுமே ஓராண்டு (12 மாதங்கள்) சிறை தண்டனை அனுபவிக்க வாய்ப்புகள் இருக்கும்.
சிங்கப்பூர் அரசு தொழிலாளர்களின் வருமான கணக்குகளை செலுத்துவது மிகவும் எளிமையாக்கி இருக்கிறது. உங்களது வருமான வரி கணக்குகளை எந்த ஒரு தகுதியான payroll software மூலம் நேரடியாக IRAS -க்கு அல்லது ஆன்லைனில் myTax Portal மூலம் செலுத்துவது எளிமையாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு go.gov.sg/iras-sffs என்ற இணையதளத்தை பார்க்கவும். இதுபோன்று வருமான வரி கணக்குகளை விண்ணப்பிக்கும் போது தவறுகள் நடைபெறலாம். இது போன்ற தவறுகளை சரி செய்யவும், வராமல் தடுக்கவும் IRAS தங்களுடைய இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்துள்ளது. இதை படித்து பார்த்து நீங்கள் வருமான வரி கணக்கு விவரங்களை விண்ணப்பிக்கலாம். Annex B – Common AIS Filing Errors Made By Employers என்ற ஆவணம் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தில் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வருமானவரி கணக்குகளை தவறாகவோ அல்லது மாற்றியோ IRAS க்கு தெரியப்படுத்துபவர்களுக்கு தகுந்த அபராதம் விதிக்கப்படும். அபராத தொகை இரட்டிப்பாக விதிக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் அறியாமல் தவறான விவரங்களை கொடுத்து விட்டீர்கள் என்றால், அதை தாங்களாக முன்வந்து தவறுகளை திருத்திக் கொள்ள IRAS வாய்ப்பளிக்கிறது. இப்படி தவறுகளை திருத்துவதில் மூலம் உங்களுடைய பெனால்டி தொகை குறைய வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக உணவகங்கள், உணவு விடுதிகள்/ காபி கடைகள், பொது ஒப்பந்ததாரர்கள், பொருட்களின் மொத்த வியாபாரம், சில்லறை வர்த்தகம் மற்றும் அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா போன்ற நிறுவனங்களே அதிகம் தங்களுடைய தொழிலாளர்களின் வருமானக் கணக்குகளை செலுத்த தவறுகிறது. இது போன்ற நிறுவனங்களே அபராதத்திற்கு அதிகம் உட்படுகிறது. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு வருமானவரித்துறையிலிருந்து வருமான வரி கட்ட கடிதம் வந்துவிட்டதா? வரவில்லை எனில் உங்களுடைய நிறுவனத்தினரிடம் சென்று விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தனிப்பட்ட வருமான விவரம் அரசுக்கு செலுத்தி ஆகிவிட்டதா என்பதை.
அனைவரும் அரசுக்கு வருமான வரி கணக்குகளை சரியாக மற்றும் முழுமையாக செலுத்தி எந்தவிதமான அபராதம் மற்றும் தண்டனை பெறாமல் இருக்க வேண்டும்.