சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களில் எத்தனை சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த கேள்விக்கு பதிலளித்த சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டாக்சி மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
ஜூலை மாதம் முதல் தேதி நிலவரப்படி இந்த சேவையில் சுமார் 92 விழுக்காடு ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும் 86 விழுக்காடு ஓட்டுனர்கள் முழுமையாக தங்களுடைய தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் வழங்கும் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்த டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு அமைச்சர் தனது நன்றியினை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
தற்போது சிங்கப்பூரில் சேவையிலுள்ள ஓட்டுநர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்து 268. இதில் ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஓட்டுனர்கள் 48 ஆயிரத்து 846. முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டு ஓட்டுனர்கள் 46 ஆயிரத்து 54 பேர்