TamilSaaga

சிங்கப்பூர் செல்ல Skilled Test முடிச்சு இருக்கீங்களா? Test-க்கு பிறகு என்னென்ன Procedure இருக்குனு தெரிஞ்சுக்கோங்க!

சிங்கப்பூரில் வேலைக்கு வரும் பல தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு Work Permit மூலம் வருவது வழக்கம். அப்படி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகவும், வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவும் Skilled Test முடித்த சான்றிதழைப் பெறுவர். இது BCA-வின் அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் மட்டுமே வழங்கப்படும். இந்த கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் சிங்கப்பூரில் செயல்படுகின்றன. இந்தியாவிலும் BCA அனுமதி பெற்ற சில கல்வி நிறுவனங்கள் உண்டு. இங்கு பணியாளர்களின் திறமைக்கு ஏற்ற வகையில் Course-களை தேர்வு செய்யலாம்.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் Course முடிந்தவுடன் உங்களுக்கான முடிவுகள் வெளியிடப்படும் அதில் உங்கள் course குறித்த தகவல்கள் மற்றும் ரேங்க் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இந்த நகல் மட்டுமே உங்களுக்கு வந்து சேரும். இதற்கான Original Certificate-ஐ பெறுவதற்கு நீங்கள் BCA தான் செல்ல வேண்டும்.

இந்தியாவில் Skilled Test முடித்த பணியாளர்கள் சிங்கப்பூர் சென்றவுடன் BCA-க்கு சென்று தங்கள் சான்றிதழைப் பெறலாம். BCA செல்ல Appointment அவசியம் இதைப் பெற உங்கள் வேலை நிறுவனமோ அல்லது ஏஜெண்ட்டுகளோ விண்ணப்பிப்பர். நீங்கள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு சென்று உங்கள் சான்றிதழைப் பெறலாம்.

செல்லும்பொழுது எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள்:

1) உங்கள் அடையாளத்தை கண்டறிய உதவும் பாஸ்போர்ட் (Original)
2) உங்கள் IPA Copy
3) BCA Appointment Printout

முதலில் உள்ளே செல்லும்பொழுது உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, உங்களுக்கான ஒரு பாஸ் வழங்கப்படும். அடுத்த கட்டமாக உள்ளே சென்றவுடன் ஒரு அலுவலர் உங்களின் பாஸ்போர்ட், IPA மற்றும் Appointment-களை சரிபார்ப்பார். அவரிடம் உங்களது முழு பெயரைத் தெரிவிக்க வேண்டும். சிறிது நேரம் காத்திருந்த பின்னர் உங்கள் வலது பெருவிரல் மற்றும் இடது பெருவிரல் ரேகைகள் பதிவு செயய்யப்படும். அடுத்ததாக கணினியில் காட்டப்படும் உங்கள் பெயர் பாஸ்போர்ட் மற்றும் உங்கள் Course விவரங்களை சரிபார்க்க வேண்டும். ஏதேனும் பிழைகள் இருப்பின் உடனே அலுவலரிடம் தெரியப்படுத்தவும். ஒருவேளை தவறினால் திரும்ப மறுபதிவு செய்வது கடினம். எனவே கவனமாக சரிபார்க்கவும். இறுதியாக உங்களின் Skilled Test Certificate பிரிண்ட் செய்யப்பட்டு உங்களிடம் வழங்கப்படும். Skill Evaluation Certificate என்ற பெயரில் இந்த சான்றிதழ் வழங்கப்படும்

பெரும்பாலும் இந்த சான்றிதழின் Original Copy உங்களிடம் தான் இருக்கும். சில சமயங்களில் உங்கள் வேலை நிறுவனம் அதனை பெற்றுக்கொள்ளும். எதற்கும் இந்த சான்றிதழின் நகலை Soft Copy-யாக உங்கள் மொபைலில் வைத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட இந்த செயல்முறைகள் அனைத்தும் சில நிமிடங்களிலேயே முடிந்து விடும். நீங்கள் செய்யவேண்டிய முக்கிய காரியம் நேரத்திற்கு அங்கு செல்வது மட்டுமே! அங்கு செல்வதற்கான வாகன வசதிகள் உங்கள் வேலை நிறுவனம் மூலமாகவோ அல்லது உங்களை வேலைக்கு எடுத்த ஏஜெண்ட்கள் மூலமாகவோ ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.

இந்த சான்றிதழ்கள் உங்கள் வேலைக்கு மிகவும் முக்கியம் ஆகவே அதில் எந்த பிழைகளும் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே உறுதி செய்துகொள்வது அவசியம்.

நீங்கள் இந்தியாவில் Skilled Test முடித்திருந்தால் சிங்கப்பூர் சென்ற பின்னர் தான் அதன் சான்றிதழைப் பெற முடியும். ஒருவேளை சிங்கப்பூரில் முடித்திருந்தால் நேரடியாக BCA-வில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவில் Skilled Test முடிக்க எத்தனை கல்வி நிறுவனங்கள் உள்ளன என்பதைப் பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கைக் க்ளிக் செய்யவும்!

https://tamilsaaga.com/ind/bca-approved-skill-test-centre-in-india/

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts