சிங்கப்பூரில் அதிகமான இளைஞர்கள் செல்லும் வேலையாக இருக்கும் டிரைவர் வேலைக்கு விசா எப்படி அப்ளே செய்யலாம் என பலருக்கு பல சந்தேகங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான தீர்வினை இந்த பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு முறையான லைசன்ஸ் அல்லது டிகிரி வைத்திருப்பவர்கள் வொர்க் பெர்மிட்டோ, S-Pass விசாவிற்கோ அப்ளே செய்யலாம். இந்தியாவில் உங்களிடம் Light மற்றும் Heavy vehicle லைசன்ஸ் வைத்து சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு சேரலாம். ஆனால் இதற்கும் சில கட்டுபாடுகள் இருக்கிறது. இந்த லைசன்ஸை வைத்து இண்டர்நேசனல் லைசன்ஸாக மாற்றிக் கொள்ள உங்களுக்கு கால அவகாசம் கொடுப்பார்கள்.
தமிழ்நாட்டிலே இண்டர்நேசனல் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து வைத்து இருந்தால் சிங்கப்பூரில் உங்களுக்கு வேலை கிடைக்கும். அங்கு இந்த லைசன்ஸை வைத்து 12 மாதம் வரை வண்டி ஓட்ட முடியும். ஆனால் அதன் பிறகு சிங்கப்பூர் லைசன்ஸாக தான் மாற்ற வேண்டும்.
இதற்கு சிங்கப்பூரில் நடக்கும் BTT(Basic Theory Test) எழுத வேண்டும். அதற்காக Bukit Batok Driving centre, comfort delgro driving centre, singapore safety driving centre ஆகிய மூன்று சென்டர்களில் ஒன்றில் தேர்வினை எழுதி பாஸ் செய்ய வேண்டும். வொர்க் பெர்மிட் மற்றும் s-pass வைத்திருப்பவர்களுக்கு 3C லைசன்ஸ் தான் முதலில் கொடுக்கப்படும். 3000 கிலோவுக்கு மிகாமல் உள்ள மோட்டார் கார்கள் ஓட்டலாம். டிரைவரைத் தவிர 7 பயணிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் லைசன்ஸ் விபரங்கள்:
Class 3 லைசன்ஸ் 2500கிலோவுக்கு மிகாமல் இருக்கும் மோட்டார் கார் மற்றும் லாரி ஓட்டுவதற்கு கொடுக்கப்படுகிறது. Class 3A clutch இல்லாத மோட்டார் வாகனங்களுக்கு இந்த லைசன்ஸ் எடுக்க வேண்டும். அதிகமாக தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு கொடுப்பது class 3c லைசன்ஸ். மோட்டார் கார் வாகனங்கள் 3000கிலோவிற்கு மிகாமல் ஓட்ட வேண்டும். Class 4A ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு கொடுக்கும் லைசன்ஸ். 7250 கிலோவுக்கு அதிகமான heavy வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு class 5 லைசன்ஸ் கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த லைசன்ஸில் மாற்றம் இருக்கும்.
டிரைவர் வேலைகள் என்ன மாதிரியாக இருக்கும். இதன் சம்பளம் என்னவாக இருக்கும். எந்த வகையான லைசன்ஸ் கேட்பார்கள் என தெரிந்து கொள்ள நாங்கள் தேடிய ஆய்வில் கிடைத்த தகவல்கள் உங்களுக்காக.
டெலிவரி டிரைவர் வேலைகள்:
நீங்கள் சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு வந்தால் 1 முதல் 2 வருடம் முன் அனுபவம் வேண்டும். Class 3 அல்லது class 4 லைசன்ஸ் கேட்கப்படும். இதற்கு சம்பளமாக $2000 முதல் $2600 சிங்கப்பூர் டாலர் கொடுக்கப்பட்டு வருகிறது. இதிலும் சிலருக்கு சம்பளத்தில் மாற்றம் இருக்கும்.
கம்பெனி டிரைவர் வேலைகள்:
கம்பெனி சம்மந்தப்பட்ட வேலைகளுக்காக வேலைக்கு எடுக்கப்படும் டிரைவர்களுக்கு 2 முதல் 3 வருடம் முன் அனுபவம் கேட்கப்படும். class 3 டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலே போதுமானது. சம்பளமாக $2500 முதல் $3500 சிங்கப்பூர் டாலர்கள் கொடுக்கப்படும்.
தனிப்பட்ட டிரைவர் வேலைகள்:
ஒரு அதிகாரிகளுக்கு தனிப்பட்ட டிரைவராக உங்களை வேலைக்கு எடுக்கும் போது class 3 டிரைவிங் லைசன்ஸ் கேட்பார்கள். சம்பளமாக $1800 முதல் $3500 வரை கொடுக்கப்படலாம். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சம்பள விபரங்கள் அனைத்துமே தோராயமான மதிப்பு தான். நீங்கள் இந்த வேலைக்கு செல்லும் போது இதில் கூடவோ, குறையவோ செய்யலாம்.
இப்படி டிரைவர் வேலைகளுக்கு சிங்கப்பூரில் அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுக்கு தெரிந்த ஏஜென்ட் மூலம் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். அதற்கு சர்வீஸ் கட்டணமாக 3 முதல் 4 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சில அதிகாரப்பூர்வ வேலை வாய்ப்பு பக்கங்களான jobstreet, job DBSல் டிகிரி வைத்து டிரைவர் வேலைக்கு செல்ல விரும்பினால் நீங்கள் நேரடியாகவும் விண்ணப்பிக்க முடியும். வொர்க் பெர்மிட்டில் செல்லும் ஊழியர்கள் ஏஜென்ட் மூலமாக தான் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.