TamilSaaga

சிங்கப்பூரில் இருந்து… சுங்க வரி இல்லாமல் எவ்வளவு நகைகளை இந்தியா கொண்டு செல்ல முடியும்? – Complete Report

SINGAPORE: உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தின் மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கும் மக்கள் இந்தியர்கள் தான். ஆம் சீனாவுக்கு அடுத்தபடி, தங்கத்தை அதிகம் புழங்கும் நாடு இந்தியா தான்.

குறிப்பாக, மிடில் கிளாஸ் மக்களின் வாழ்வாதாரமே இந்த தங்கத்தை நம்பி தான் உள்ளது. அவர்கள் அதனை ஒருநாள் அணிந்து பார்க்க மாட்டார்கள். அவர்களது நிலைமை அதனை அணியவும் விடாது. மாறாக, யாரிடமும் கை நீட்டி கடன் வாங்காமல், தங்கத்தை அடகு வைத்து குடும்பம் நடத்துவது மிடில் கிளாஸ் மக்களே

இந்த சூழலில், இந்தியாவில் விழாக்காலம் தொடங்கிவிட்டது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று அடுத்த நான்கு மாதங்களுக்கு பண்டிகைகள் களைக்கட்டும்.

இந்த காலத்தில் தான் பணியாளர்களுக்கு போனஸ் அதிகமாக கிடைக்கும். அதில் வரும் பணத்தில் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள். குறிப்பாக, தங்களது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் இருந்தால் தங்கம் வாங்கிவரச் சொல்வார்கள்.

ஆனால், சிங்கப்பூரில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் வாங்கி வந்தால் சுங்கவரி செலுத்த வேண்டும். எனவே, வரி இல்லாமல் எவ்வளவு தங்கம் சிங்கப்பூரில் இருந்து கொண்டு செல்லலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – கொஞ்சம் அசந்தாலும் மரணம்.. சிங்கப்பூரில் தகுதியற்ற ஊழியர் இயக்கிய கனரக வாகனம் – “திருந்தவே மாட்டீங்களா?” என்று விளாசிய அதிகாரிகள் – இரு நிறுவனங்களுக்கு தடை!

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் தங்கத்தின் விலை குறைவு என்பது அனைவருக்கும் தெரியும். தங்கத்தை இங்கிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்தாலோ, அல்லது கூடுதலாக வாங்கி வந்தாலோ செய்கூலி, இறக்குமதி வரி, நாணய மாற்று செலவுகள் மற்றும் ஜிஎஸ்டி என ஏகப்பட்ட கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். இன்றைய நிலவரப்படி, தங்கம் மீதான இறக்குமதி வரி 12.5 சதவிகிதமும், ஜிஎஸ்டி 3 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்திய வரி விதிகளின்படி, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரி இல்லாமல் குறைந்த அளவில் தான் தங்க நகைகள் வாங்கிச் செல்ல முடியும்.

சிங்கப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேல் தங்கியிருக்கும் இந்தியர் ஒருவர், 20 கிராம் தங்க நகைகள் வாங்கிச் செல்ல முடியும். அதாவது அதன் மதிப்பு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது. அப்படியெனில், வரி இல்லாமல் தங்கம் கொண்டுச் செல்ல முடியும். பெண் பயணிகளுக்கு இதில் விலக்கு உள்ளது. அதாவது, பெண் பயணிகள் 40 கிராம் வரை கொண்டு செல்லலாம். அதன் மதிப்பு ரூ.1 லட்சத்தை தாண்டக் கூடாது. 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் பெயரில் கூட தங்கம் வாங்கி செல்லலாம். இதற்கு வரி செலுத்த தேவையில்லை.

அதுவே ஒருவேளை 1 வருடத்திற்கு குறைவாக சிங்கப்பூரில் தங்கியிருந்து தங்கம் வாங்கிச் செல்ல வேண்டுமெனில், 36.05% இறக்குமதி வரி செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts