TamilSaaga

சிங்கப்பூர் வேலைக்காக ஏஜென்ட்டை தொடர்பு கொள்ள போறீங்களா… வேலைக்காக எத்தனை லட்சம் கேட்பார்கள்… $3000 டாலர் சம்பளம் கொடுக்கும் இந்த பாஸ் குறித்து தெரிஞ்சிக்கோங்க..

சிங்கப்பூருக்கு ஏஜென்ட்டினை வைத்து வேலை தேடுபவர்கள் தான். அவர்கள் எவ்வளவு கேட்பார்கள் என ஒரு அடிப்படை தகவல் கூட இல்லாமல் அவர்களிடம் போக கூடாது. அதற்கு தான் இது. சிங்கப்பூரில் வேலைக்கு வரும் முன் செலவுகள் இத்தனை லட்சத்தில் இருக்கும் என நீங்கள் தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படியுங்கள்.

முதலில் வெளிநாடு செல்ல விரும்பும் எல்லா இளைஞர்களும் ஈசியாக யோசிப்பது ஒரு ஏஜென்ட்டை பார்க்கலாம் என்பதே. பாஸ்போர்ட்டை அவர்களிடம் கொடுத்து நம்ம கல்வி தகுதியை சொன்னால் போது வேலை கிடைத்து விடும் என நினைப்பவர்கள் தான் அதிகம். ஆனால் இந்த முறையில் வேலை தேடும் போது அதற்கு கட்டணமே அதிக லட்சத்தில் இருக்கும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.

சிங்கப்பூருக்கு முதலில் வர ரொம்ப சொற்ப தொகையே கேட்கப்பட்டு வந்தது. பொருளாதாரம் அதிகரிக்க அதிகரிக்க இதன் கட்டணமும் உயர்ந்து கொண்டே இருந்தது. 15 வருடத்திற்கு முன்னர் வெறும் 1 லட்சத்தில் இருந்த கட்டணம் இப்போது நான்கு மடங்காகவே அதிகரித்து விட்டது.

படிக்காதவர்கள் அதிகமாக வருவது Shipyard Permit, PCM permitல் தான். ஒரு துறையில் சின்ன அனுபவம் இருப்பவர்கள் Skilled Test அடித்து சிங்கப்பூர் வருவார்கள். அடுத்து ஒரு டிகிரி வைத்திருப்பவர்கள் S-passலும், மாஸ்டர் டிகிரி படித்து அனுபவம் வைத்திருப்பவர்கள் E-passலும் வருவார்கள்.

Shipyard permitல் ஏஜென்ட் தொகையாக குறைந்தபட்சம் 80 ஆயிரத்தில் இருந்து 1.20 லட்சமாக தான் இருக்க வேண்டும். உங்கள் சம்பளம் தினசரி ஒரு நாளைக்கு $18 சிங்கப்பூர் டாலராக தான் இருக்கும். அதனால் உங்களால் கட்டிய தொகையை எடுப்பது நேரம் எடுக்கும். இந்த தொகையை விட அதிகம் கேட்கும் ஏஜென்ட்களிடம் காட்டாமல் இருப்பதே நல்லது.

PCM permitல் 1 லட்சத்தில் இருந்து 1.80 லட்சத்திற்குள் ஏஜென்ட் கேட்டால் மட்டுமே கட்டுங்கள். இந்த தொகையை விட அதிகம் கேட்பவர்களிடம் குறைத்து பேச வேண்டும். ஏனெனில் இந்த தொகை முழுவதுமே ஏஜென்ட்களுக்கு மட்டும் என்பதால் நீங்கள் குறைத்து பேசலாம்.

Test அடிப்பதற்கு இன்ஸ்ட்யூட் செலவு முதற்கொண்டு சிங்கப்பூர் வரும் வரை ஏஜென்ட்டிடம் 3.5 லட்சத்தில் இருந்து 4 லட்சத்திற்குள் கட்ட வேண்டியதாக இருக்கும். டெஸ்ட் அடித்து வருபவர்களுக்கு ரூம் வாடகை, தண்ணி பில் என எதுவும் பிடித்தம் செய்யப்படாது. சம்பளத்துடன் நிறைய OTயும் செய்யலாம்.

S-Passக்கு ஏஜென்ட் 4 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக மட்டுமே கேட்கப்பட்டு வருகிறது. இதில் ஏமாற்று வேலை அதிகமாக இருப்பதால் முன்பணம் கொடுக்காமல் இருக்கலாம். எதுவும் கட்ட வேண்டும் என ஏஜென்ட் கேட்டால் 10 ஆயிரத்துக்குள் கொடுக்கலாம். ஏனெனில், சிங்கப்பூர் s-pass கொடுக்க வெறும் 180 டாலருக்குள் தான் வாங்கிறார்கள். இதனால் அதிக பணத்தினை கட்டி ஏமாறாமல் இருக்கலாம். இந்த பாஸில் வந்தவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் டாலர் சம்பளமாக சிங்கப்பூர் அரசாங்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையாக இருக்கிறது.

E-Pass வாங்கி கொடுக்க ஏஜென்ட் 4.50 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக கேட்கப்படுகிறார்கள். இந்த பாஸுக்கு மோசடி நடக்கலாம். அதனால் கொஞ்சம் தெளிவாக இந்த தொகையில் சிங்கப்பூருக்கு வருவதே சிறந்தது. மாத சம்பளமாக 6 ஆயிரம் டாலரை கொடுக்க வேண்டும் என நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

ஏஜென்ட்டிடம் வருவதற்கு முன்னரே வேலை குறித்த தகவலை முழுதாக கேட்டப்பிறகே தொகையை கட்டுங்கள். பலருக்கு வேலை கடினமாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கே திரும்பி விடுகின்றனர். அதனால் பெரிய தொகையை கட்டும் போது பேரம் பேசுவது தப்பும் இல்லை.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts