TamilSaaga

“இரண்டாவது நாளாக தொடரும் கனமழை” – சிங்கப்பூரில் சில இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நமது சிங்கப்பூர் தீவு முழுவதும் இந்த வாரம் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்று தேசிய நீர் நிறுவனமான PUB தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வானிலைச் சங்கமான MSS, தேசிய சுற்றுச்சூழல் முகமையின் கீழ் உள்ள ஒரு அலகு, இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) காலை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தது. மத்திய மற்றும் மேற்கு சிங்கப்பூரில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் மற்றும் கிழக்கில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தது.

இன்று காலை 8.20 மணியளவில், PUB, காமன்வெல்த் லேன் மற்றும் காமன்வெல்த் டிரைவில் நீர் நிலைகள் அதிக மழை பொழிவைத் தொடர்ந்து முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன என்பர் கூறியது. இந்த இரண்டு சாலைகளிலும் வெள்ள அபாயம் கண்டறியப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு அப்பகுதியை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

காலை 9 மணியளவில், தஞ்சோங் பெஞ்சூரின் தொழிற்பேட்டையில் உள்ள நீர் நிலை சென்சார்கள், அங்குள்ள வடிகால்கள் குறைந்தது 90 சதவிகித திறனை எட்டியிருப்பதை காட்டின. ஆனால் பின்னர் அது குறைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MSS இணையதள அறிவிப்பின்படி, இன்று காலை 8 மணிக்கு நோவனாவில் 23.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும் இந்த வாரம் முழுதும் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts