ஹாக்கர் சென்டர்கள் (Hawker centers), சிங்கப்பூர்காரங்களோட அடையாளம்! சிக்கனமான விலையில சுவையான உணவு, விதவிதமான கலாசாரங்களோட கலவை, இதெல்லாம் ஹாக்கர் சென்டர்களோட சிறப்பு. ஆனா, இந்த ஹாக்கர் சென்டர்களை நிர்வகிக்கிறதுல ஒரு முக்கியமான விதி இருக்கு. அது தான் இப்போ சிக்கலாகி இருக்கு.
சிங்கப்பூர்ல ஹாக்கர் சென்டர்கள், சாதாரண மக்களுக்கு சிக்கனமான விலையில உணவு கொடுக்குறதோட, சிறு தொழில்முனைவோருக்கு (entrepreneurs) ஒரு வாய்ப்பையும் கொடுக்குது. ஆனா, சிலர் இந்த கடைகளை வாடகைக்கு விட்டு, லாபம் பார்க்க ஆரம்பிச்சதால, NEA ஒரு கடுமையான விதியை கொண்டு வந்தது: “கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை தனிப்பட்ட முறையில் நடத்தணும், அதாவது, அவங்க Presence கடையில இருக்கணும்.”
இந்த விதியோட முக்கிய நோக்கங்கள் இதுதான்:
வாடகை மற்றும் உணவு விலை உயர்வை தடுக்க: கடைகளை வாடகைக்கு விட்டா, வாடகை அதிகமாகி, உணவு விலையும் ஏறிடும். இது சாதாரண மக்களுக்கு பாதிப்பு.
நியாயமான வாய்ப்பு: புது ஹாக்கர்கள் இந்த தொழிலுக்கு வர, கடைகள் சுலபமா கிடைக்கணும். வாடகைக்கு விடுறது இதை தடுக்குது.
ஹாக்கர் கலாசாரத்தை பாதுகாக்க: பெரிய பிரான்சைஸ் நிறுவனங்கள் ஹாக்கர் சென்டர்களை ஆட்டிப் படைக்காம, சிறு தொழில்முனைவோரோட உண்மையான உணவு கலாசாரம் தொடரணும்.
Senior Minister of State for Sustainability and the Environment, டாக்டர் கோ போ கூன், பாராளுமன்றத்துல இது பற்றி பேசுகையில், “ஹாக்கர் சென்டர்கள் வெறும் வியாபார இடங்கள் மட்டுமல்ல, இது சமூகத்தோட பொது உணவு இடங்களும் கூட. இதோட உண்மையான தன்மையை பாதுகாக்கணும்.” என்று.
சர்ச்சையோட தொடக்கம்: ஒரு கர்ப்பிணியின் கதை
யிஷுன் பார்க் ஹாக்கர் சென்டர்ல நசி லெமாக் கடை நடத்துற நூர்மன் முபாரக், தன்னோட கர்ப்பிணியான மனைவி கடையில இருக்க முடியாததால, NEA-விடம் இருந்து எச்சரிக்கை கடிதம் வந்ததா பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்த பதிவு வைரலாகிடுச்சு. அதனால் பேசு பொருளாகவும் மாறிடுச்சு.
இதுகுறித்து நூர்மன் பேசுகையில், “எங்க கடையை 2017-ல இருந்து நாங்க தனிப்பட்ட முறையில நடத்தினோம். இப்போ டெக்னாலஜி, சாப்ட்வேர் உபயோகிச்சு, நிர்வாக வேலைகளை பார்க்குறோம். ஆனா, கடையில நாங்க இருக்கணும்னு NEA சொல்றது நியாயமா?” என்று கேட்டிருக்கார். இவரோட மனைவி, 40 வார கர்ப்பிணியா இருக்குற நிலையில, இந்த விதி கடுமையா இருக்குனு பலரும் விமர்சித்து இருக்காங்க.
விதியோட நடைமுறை: எப்படி செயல்படுது?
NEA-வோட இந்த விதி, 2012-ல இருந்து கடுமையா அமல்படுத்தப்பட்டு வருது. 2024-ல, 230-க்கும் மேற்பட்ட கடைகள் இந்த விதியை மீறியதால எச்சரிக்கை பெற்ருச்சு. இதுல 30 கடைகளுக்கு குத்தகை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தில் புதிய வசதி: அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்!
ஆதரவும் எதிர்ப்பும்:
பெரும்பாலான ஹாக்கர்கள், இந்த விதி வாடகைக்கு விடுறதை தடுக்குறதுல பயனுள்ளதா இருக்குனு சொல்றாங்க. ஒரு ஹாக்கர், “இந்த விதி இல்லைனா, பெரிய பிரான்சைஸ் கம்பெனிகள் எல்லா கடைகளையும் கைப்பற்றிடும்” என்று சொல்லியிருக்கார்.
அதேசமயம் சிலர், இந்த விதி தங்களை தொழிலை விட்டு வெளியேற்றுற மாதிரி இருக்குனு சொல்றாங்க. வயதானவர்கள் எப்படி எல்லா நேரமும் கடையில் இருக்க முடியும்-னு கேள்வி எழுப்புறாங்க.
சிங்கப்பூரோட ஹாக்கர் சென்டர்கள், வெறும் உணவு இடம் மட்டுமல்ல, இது ஒரு கலாசார அடையாளம், சமூகத்தோட இதயம். NEA-வோட தனிப்பட்ட நிர்வாக விதி, இந்த கலாசாரத்தை பாதுகாக்குறதுக்கு முக்கியமானது, ஆனா இதுல இன்னும் நவீனமான, நெகிழ்வான அணுகுமுறைகள் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.