TamilSaaga

“பெண்ணோடு பொதுவெளியில் இரவு உணவு” : தனிமைப்படுத்துதலை மீறிய நபர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் இரவு உணவுக்காக ஒரு பெண்ணை சந்திக்க தனது தங்குமிட அறிவிப்பை மீறி அதன் மூலம் மற்றவர்களுக்கு தொற்று அபாயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 27 வயதான நபர் மீது இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. சிங்கப்பூரில் ஆங் சென்ருய் என்பவர் தனது 14 நாள் தங்குமிட அறிவிப்பின் போது நான்கு முறை ஜேடபிள்யூ மேரியட் சிங்கப்பூர் தெற்கு கடற்கரையில் உள்ள தனது ஹோட்டல் அறையை விட்டு வெளியேறியதாக குற்றம் சட்டப்பட்டுள்ளார். குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) செய்தி வெளியீட்டின் படி, ஆங் இந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி சிங்கப்பூர் திரும்பினார், மற்றும் மே 1 வரை ஒரு பிரத்யேக தங்குமிடத்தில் தங்க அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அவர் சிங்கப்பூர் வந்ததும் குடியேற்ற அனுமதி அளிக்கப்பட்ட பிறகு அவர் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவர் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு தனது தங்குமிட அறிவிப்பை மீறியுள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. ஆங் ஏப்ரல் 20ம் தேதி காலை 8.50 மணி முதல் இரவு 11.35 மணி வரை தனது ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினார் என்று குற்றம் சட்டப்பட்டுள்ளார். அவர் அருகில் உள்ள காபி ஷாப்பில் தனது பெண் தோழியுடன் இருந்துள்ளார். மேலும் இரவு உணவிற்கு முன் 416 செராங்கூன் சென்ட்ரலுக்கு சென்றுள்ளார். இதற்குப் பிறகு, அவர்கள் NEX ஷாப்பிங் மையத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அடுத்த நாள், ஆங் மீண்டும் தனது ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி பொது நடைபாதையில் அமைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஏப்ரல் 22 அன்று, அவர் ஹோட்டலின் தரை தளத்திற்குச் செல்வதற்காக தனது ஹோட்டல் அறையை விட்டு வெளியேறினார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஹோட்டல் ஊழியர்கள் அவரைப் பார்த்த பிறகு அவர் தனது அறைக்குத் திரும்பினார், என்று ICA தெரிவித்துள்ளது.

ஆங் தற்போது ரிமாண்ட் செய்யப்படவில்லை மற்றும் 10,000 வெள்ளி பிணை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொள்ள அவர் டிசம்பர் மாதம் நீதிமன்றத்திற்கு மீண்டும் வருவார் என்று கூறப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அபாயத்திற்கு மற்றவர்களை வெளிப்படுத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts