சிங்கப்பூரில் ஒரு நபர் தனது மகளுக்கு 10 வயதாக இருந்தபோதிலிருந்து சுமார் 4 ஆண்டுகள் பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்துள்ளார். அதே போல அந்த அரக்கன் 2017 முதல் ஜூன் 2018க்கு இடைப்பட்ட காலத்தில் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது தனது மகளையோ பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் என்ற திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது.
தற்போது 41 வயதாகும் அந்த மனித மிருகத்திற்கு இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 4) 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மற்றொரு கொடுமை என்னவென்றால் குற்றங்கள் நடந்தபோது அந்த நபர் சிங்கப்பூர் ஆயுதப் படையில் (SAF)சேவை செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களை பாதுகாக்க (GAG) அந்த நபரின் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை. அந்த நபர் தன் மீது சுமத்தப்பட்ட கொடூர கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டான். அவரது மகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் தண்டைனையின்போது பரிசீலிக்கப்பட்டன.
விசாரணையின் போது அந்த குற்றவாளி கூறியது “தனது மகள் மற்ற சிறுவர்களுடன் இணைந்து பாலியல் இன்பங்களில் ஈடுபட்டால், அவர்கள் அவளை ஏமாற்றிவிடக்கூடும் என்றும்.” “அதுவே தன்னுடன் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தால் அவளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும்” என்று கூறியுள்ளான்.
Primary 4 மற்றும் Primary 5 படிக்கும் சமயத்தில் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக அணுகிய அவன், சில வருடங்களுக்கு பிறகு சிறுமியுடன் உடலுறவுகொள்ள துவங்கியுள்ளன. சில நேரங்களில் ஆணுறை கிழிந்துவிட அந்த சிறுமிக்கு கருத்தடை மாத்திரைகளையும் கொடுத்துள்ளான். இப்படி பல ஆண்டுகள் நகர்ந்த நிலையில் 2018ம் ஆண்டு அவன் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக அணுகியபோது அந்த சிறுமியின் தாய் அதை பார்த்து திடுக்கிட்டுள்ளார்.
பின்னர் அவர் மூலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட, அவனை போலீசார் கைது செய்தனர். பல ஆண்டுகளாக வெளியில் சொல்ல முடியாத வேதனையில் தவித்து வந்த அந்த சிறுமி மீட்கப்பட்டபோது மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்தது. பாலியல் ரீதியான ஒரு தவற புரிதல் அவளிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமிக்கு தேவையான Counseling அளிக்கப்பட்டு வருகின்றது.