TamilSaaga
little india

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்து…. விரைந்த தீயணைப்பு படை.. அவசர அவசரமாக வெளியேறிய மக்கள்!

லிட்டில் இந்தியா, சிங்கப்பூரில் உள்ள ஒரு வண்ணமயமான பகுதி. இது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக விளங்குகிறது. இங்கு, இந்திய உணவகங்கள், மளிகைக் கடைகள், மற்றும் பாரம்பரிய உடைகள் விற்பனை செய்யும் கடைகள் நிறைந்துள்ளன.

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூரில் 31 நோரிஸ் ரோட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Complaint Singapore Facebook பக்கத்தில் உள்ள பதிவுகளின்படி, தீயை அணைக்க பல காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்தனர்.

 

சிங்கப்பூர் S Pass வேலை வாய்ப்பு பற்றிய அடிப்படை தகவல்கள்: விண்ணப்பிக்கும் முறை

கடையிலிருந்து கரும் புகை வெளியேறியதாகவும், கண்ணாடி உடையும் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts