TamilSaaga

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு சட்டத்தின் “பகுதி IV” சொல்வது என்ன? – தொழிலாளர்கள் கவனிக்கவும்

சிங்கப்பூர் அரசும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகமும் நாட்டில் வேலை செய்யும் அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக இந்த பதிவில் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு சட்டத்தின் “பகுதி IV” தொழிலாளர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முதலாளிகளுக்கும் என்ன சொல்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு சட்டத்தின் “பகுதி IV”

வேலைவாய்ப்பு சட்டம் என்பது MOM மற்றும் CPF வாரியத்தால் 2012ல் தொடங்கப்பட்டது, தொழிலாளர்களான நீங்கள் கடினமாக உழைக்கும் அதே நேரத்தில் உங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஓய்வு நேரத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு வாரத்திற்கு 1 நாள் ஓய்வு வழங்கப்பட வேண்டும், அவர்கள் ஓய்வு நாளில் பணிபுரிந்தால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

வாரத்துக்கு எத்தணை மணிநேரம் வேலை செய்யலாம்?

நீங்கள் வாரத்தில் 5 அல்லது அதற்கும் குறைவான நாட்கள் உழைப்பவர் என்றால் தினமும் 9 மணிநேரம் அல்லது வாரத்துக்கு 44 மணிநேரம் பணிசெய்யவேண்டும்.

நீங்கள் வாரத்தில் 5 நாட்களுக்கும் மேல் வேலை செய்பவர்களாக இருந்தால் தினமும் 8 மணிநேரம் அல்லது வாரத்துக்கு 44 மணிநேரம் பணிசெய்யவேண்டும்..

வருடாந்திர விடுப்பு

நீங்கள் ஒரு நிறுவனத்தில் 3 மாதங்கள் தொடர்ந்து பணிசெய்யும் பட்சத்தில் நீங்கள் வருட விடுப்பு எடுக்க தகுதி பெறுவீர்கள். அதேசமயம் நீங்கள் உங்கள் முதலாளியுடன் எத்தனை ஆண்டுகள் சேவை செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு வருட விடுப்பு வழங்கப்படும். உங்கள் முதலாளியுடன் நீங்கள் பணியைத் தொடங்கிய நாளிலிருந்து உங்கள் சேவை ஆண்டு தொடங்குகிறது.

ஒருவருடம் நீங்கள் ஒரு நிறுவனத்தில் உழைக்கும்பட்சத்தில் நீங்கள் வருடத்திற்கு 7 நாட்கள் விடுப்பு எடுக்கலாம். ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு நாள் விடுப்பு அதிகரிக்கும். 8 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிசெய்யும்போது உங்களுக்கு 14 நாட்கள் வருட விடுப்பு கிடைக்கும்.

மேலும் இதுபோன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள மனிதவள அமைச்சகத்தின் முகநூல் பதிவுகளை நீங்கள் பார்க்கலாம்.

Related posts