TamilSaaga

தமிழக தொழிலாளர்களே கவனமாக இருங்க…சிங்கப்பூரில் மீண்டும் வேகம் எடுக்கும் டெங்கு…6 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு!

சிங்கப்பூரில் இனி வரும் வாரங்களில் டெங்கு அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதால், வீடுகளில் கொசுக்கள் பெருகாமல் வைத்திருக்குமாறு சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற அமைப்பு பொதுமக்களை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை வாராவாரம் அதிகரித்து வருவதால் DENV-1 என்ற வகையைச் சேர்ந்த கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக அரசு கூறியுள்ளது.

சிங்கப்பூரின் பல இடங்களில் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக பரவி வருவதால் அரசு இந்த எச்சரிக்கையினை பொதுமக்களுக்கு விடுத்துள்ளது. இதற்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சிங்கப்பூரில் இல்லாத நிலையில் இப்பொழுது உயர்ந்து வருவதால் முன்பு போல் எண்ணிக்கை மிகவும் உயரக்கூடாது என அரசு முன்கூட்டியே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

செப்டம்பர் 5 வரை சிங்கப்பூரில் 6200-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே வீடுகளில் நீர் தேங்கி இருப்பதை தவிர்க்க வேண்டுமெனவும், கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts