TamilSaaga

Covid – 19 Update : சிங்கப்பூரில் உள்ளுரில் மேலும் 69 பேருக்கு பரவிய தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 9) புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வழக்குகளுடன் எந்த தொடர்பும் இல்லாத 20 நோய்த்தொற்றுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 39 நோய்த்தொற்றுகள் முந்தைய வழக்குகளுடன் இணைக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒன்பது இணைக்கப்பட்ட தொற்றுகள் கண்காணிப்பு சோதனை மூலம் கண்டறியப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 3 பேர் உளப்பட நாட்டில் இன்று 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பலரிடம் தொற்று பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை கடுமையாகிவருகின்றது சிங்கப்பூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 65,836 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 570க்கும் அதிகமான நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்கப்பூரில் இதுவரை 42 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

Related posts