TamilSaaga

“சாங்கி விமான நிலைய டெர்மினலில் தீ விபத்து” : 1 மணி நேரம் பாதித்த பொதுப் பேருந்து சேவைகள்

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 1ன் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று பொதுப் பேருந்து சேவைகள் சாங்கி விமான நிலைய பேருந்து நிறுத்தங்களைத் தவிர்த்தன. நேற்று இரவு 9.50 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது. SCDF படையினர் அங்கு வருவதற்குள் விமான நிலைய அவசர சேவை குழு அந்த தீயை அணைத்துள்ளது.

SCDF வெளியிட்ட தகவலின்படி இந்த தீச் சம்பவத்தில் எந்த காயங்களும் இல்லை என்றும், புகை வெளியேற்றும் கருவிகளைப் பயன்படுத்தி அடித்தளத்தில் காற்றை சுத்தம் செய்ததாகவும் அறிவிக்கப்பட்டது. “தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரணையில் உள்ளது,” என்று SCDF மேலும் கூறியது. SBS டிரான்சிட் நேற்று இரவு 10.50 மணியளவில் வெளியிட்ட ட்வீட்டில் 24, 27 மற்றும் 53 பஸ் சேவைகள் டெர்மினல் 1, டெர்மினல் 2 மற்றும் ஏர்போர்ட் பவுல்வர்டில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து திருப்பி விடப்படும் என்று கூறியது.

அதன்பிறகு ஒரு மணிநேரம் கழித்து அந்த சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது என்றும் SBS டிரான்சிட் தனது ட்வீட்டில் தெரிவித்தது.

Related posts