TamilSaaga

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இந்திய பெண் கைது – காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் திருடியதாக இந்தியாவைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிங்கப்பூரில் இடைவழிப் பயணத்தில் இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மாதம் (மார்ச்) 15ஆம் தேதி, இரண்டாம் முனையத்தில் உள்ள The Shilla ஒப்பனைப் பொருள் கடையில் திருட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. கடையில் பொருட்களை சரிபார்க்கும்போது 2 வாசனை திரவிய பாட்டில்கள் காணாமல் போனது தெரியவந்தது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

கண்காணிப்பு கேமரா காட்சிகள்:

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் கட்டணம் செலுத்தாமல் 2 பாட்டில்களை கடையில் இருந்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. கடை ஊழியர் உடனடியாக அங்கிருந்த பாதுகாவலரிடம் நடந்ததை தெரிவித்தார்.

கைது மற்றும் விசாரணை:

அந்தப் பெண் சிங்கப்பூரிலிருந்து வெளியேறுவதற்கு முன் பாதுகாவலர் அந்தப் பெண்ணை தடுத்து வைத்தார். அவரிடம் விசாரித்தபோது, அவர் ஒரு பாட்டிலை மட்டும் ஒப்படைத்தார். இருப்பினும், அவரது பையில் மேலும் 3 பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எஞ்சிய 2 பாட்டில்களை அவர் வேறு கடையில் திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருட்களின் மதிப்பு:

திருடப்பட்ட 4 பாட்டில்களின் மதிப்பு சுமார் 740 சிங்கப்பூர் டாலர் ஆகும்.

நீதிமன்றத்தில் ஆஜர்:

கைது செய்யப்பட்ட பெண் மீது நாளை (மார்ச் 20) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts