இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஜி20 உச்சி மாநாடு நடக்கவிருக்கின்றது. இதில் உலகில் உள்ள பல முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அனைவரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருவதால் மூன்று நாட்களுக்கு டெல்லியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வதால், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மக்கள் போக்குவரத்து சிரமங்களை சந்திக்க வேண்டிய அவசியம் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக டெல்லிக்கு வரும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனவும், இந்திய நாட்டின் பெயருக்கு எவ்வித கலங்கமும் ஏற்படாத வண்ணம், மக்கள் சிரமத்தினை பொறுத்துக் கொண்டு மாநாடு நல்லபடியாக நடைபெற அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.