சிங்கப்பூர் மட்டுமல்ல தாயகம் விட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய கைபேசி தான் தனது குடும்பத்துடன் இணைப்பில் இருக்க ஒரே வழி. அந்த வகையில் சிங்கப்பூர் வரும் தொழிலாளர்கள் இங்கு எந்த நெட்ஒர்க் சேவையை தேர்ந்தெடுக்கலாம், சிறப்பான Top Up Planகள் என்னென்ன உள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
முன்பெல்லாம் சிங்கப்பூருக்கு வந்திறங்கியதை கூறவேண்டும் என்றாலும் கூட அது மிக கடினம், யாரிடமாவது போன் கடன் வாங்கித்தான் சொந்தங்களிடம் சிங்கை வந்திறங்கியதை கூறமுடியும். ஆனால் இது 2022, டிஜிட்டல் உலகம், சாங்கி வந்திறங்கியதும் இலவச wifi மூலம் எளிதில் உங்கள் சொந்தங்களை தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
சாங்கி விமான நிலையத்தில் சிம் கார்டு வாங்கலாம்
நீங்கள் சிங்கப்பூர் வந்திறங்கியதும் கட்டாயம் சிம் கார்டு பெற்று அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் Activate செய்யவேண்டும். ஆகையால் நீங்கள் சிங்கப்பூருக்குள் பெற விரும்பும் அனைத்து வகை சிம் கார்டுகளையும் சாங்கி விமான நிலையத்திலேயே பெறலாம்.
ஆனால் வெளியில் விற்கப்படுவதைவிட 10 முதல் 15 டாலர்கள் அதிக விலையில் தான் சிம் கார்டுகள் சாங்கி விமான நிலையத்தில் விற்கப்படும். நமக்கு சேமிப்பே மிக அவசியம் என்பதால் அங்கு வாங்குவதை தவிர்க்கலாம்.
சிங்கையில் முக்கிய Service Providerகள் எவை?
Singtel, Star Hub மற்றும் M1 இவை மூன்றும் தான் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் மூன்று முன்னணி நிறுவனங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் அறிமுகமான TPG என்ற நிறுவனமும் சேவைகளை அளித்து வருகின்றது.
சரி இதில் உங்களுக்கு எந்த நிறுவனம் தரும் Planகள் வசதியாக இருக்கும் என்று பார்த்தல், அது உங்களுடைய தேவையை பொறுத்தது என்று தான் கூறவேண்டும். தற்போது உங்களுக்கு உள்ளூருக்கும் சொந்த நாட்டிற்கும் அதிக அளவில் Call பேசவேண்டும் என்றால் நிச்சயம் Singtel அல்லது StarHubஐ நீங்கள் தேர்வு செய்யலாம்.
இல்லை, எனக்கு அதிக இன்டர்நெட் கிடைத்தால் பொது என்பவர்கள் நிச்சயம் TPG அல்லது M1ஐ தேர்ந்தெடுப்பது மிகச்சிறந்தது.
சிங்கப்பூரில் சிம் கார்டின் ஆரம்ப விலை என்ன?
சிங்கையை பொறுத்தவரை 10 வெள்ளி முதல் உங்களுக்கு சிம் கார்டுகளை பெறலாம், உதாரணமாக 10 வெள்ளிக்கு நீங்கள் recharge செய்தால் 7 வெள்ளி வரை உங்கள் கணக்கில் இருக்கும். மேற்கொண்டு உங்களுக்கு இலவச இன்டர்நெட் சேவையும் வழங்கப்படும்.
சிங்கப்பூரை பொறுத்தவரை அதிகபட்ச வேலிடிட்டி என்பது 30 நாட்கள் வரை தான் இருக்கும், ஆகையால் நிச்சயம் உங்கள் மாதசம்பளத்தில் இருந்து நிச்சயம் ஒரு தொகையை நீங்கள் போன் recharge செய்ய ஒதுக்கியே ஆகவேண்டும்.
சிம் கார்டு பெற தேவையான ஆவணங்கள்
சிங்கப்பூர் வந்திறங்கியதும் உங்களுக்கு work பெர்மிட் கிடைக் சில காலமாகும் ஆகவே நீங்கள் உங்கள் பாஸ்ப்போர்ட்டை வைத்தே உங்களுக்கு தேவையான சிம் கார்டை வாங்கலாம்.
Singtel நிறுவன பிளான்கள்
Singtelஐ பொறுத்தவரை அதிக அளவிலா தொழிலாளர்கள் பயன்படுத்துவது 55 என்ற top up தான், 15 வெள்ளிக்கு நீங்கள் top up செய்தால் உள்ளூருக்குள் பேச 55 வெள்ளி கிடைக்கும் மேலும் 15 நாட்களுக்கு உங்களுக்கு incoming கால்கள் இலவசமாக தரப்படும். இறுதியாக நாம் Top Up செய்யும் 15 வெள்ளிக்கும் நம்மால் கால் பேசிக்கொள்ளமுடியும்.
M1 நிறுவன பிளான்கள்
தொழிலாளர்கள் M1 சிம் கார்டுகளை 12 வெள்ளிக்கு வாங்கலாம், அப்படி வாங்கும் பட்சத்தில் உங்களுக்கு 100 நிமிடங்கள் உங்கள் சொந்த ஊருக்கு பேசிக்கொள்ளலாம், 50 GB வரை 30 நாட்களுக்கு Internet கொடுக்கப்படும்.
Wifi
சிங்கப்பூரை பொறுத்தவரை நீங்கள் வேலை செய்யும் இடங்கள் முதல் தங்கும் இடம் வரை அனைத்து இடங்களிலும் Wifi வசதி இருக்கும். அதற்கு மேல் நீங்கள் வெளியில் செல்லும்போது அல்லாது ஓட்டுநர் போன்ற வேலைகளில் நீங்கள் ஈடுபடும்போது தான் உங்களுக்கு Phone Internet தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூரில் பேசிக்கொள்ள Singtel மற்றும் StarHub ஆகிய நிறுவன சிம்களையும், ஊருக்கு இன்டர்நெட் முலம்பேச TPG மற்றும் M1 சேவைகளையும் பயன்படுத்தும் தொழிலாளர்கள் இங்கு அதிகம் உண்டு.
ஆகவே நீங்கள் சிங்கப்பூரில் அதிகபட்சமாக மாதத்திற்கு 10 முதல் 25 வெள்ளி வரை ஒதுக்கினாலே உங்களால் தடையற்ற அலைபேசி இணைப்பை பெறமுடியும். ஆகவே 25 வெள்ளி என்ற மாத பட்ஜெட்டில் உங்களால் சுலபமாக உங்கள் சொந்தங்களோடு இணைந்திருக்க முடியும்.
Line Sim
சிங்கப்பூர் வரும் புதிய தொழிலாளர்கள் பலருக்கும் வரப்பிரசாதமாக அமையும் ஒன்று தான் இந்த Line Sim, Singtel, StarHub போன்ற அனைத்து நிறுவனங்களின் ஷோரூம்களிலும் இந்த Line Sim வசதி இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் லேட்டஸ்ட் மாடல் போன் எதுவாக இருந்தாலும் அதை Down Payment இல்லாமல் பெற்றுக்கொள்ளும் வசதி உண்டு.
S Passக்கு மேல் உள்ள விசாக்களில் வருவோருக்கு மட்டுமே இந்த வகை சலுகைகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. Down Payment இல்லாமல் நீங்கள் போன் பெற்றுக்கொண்டு பிறகு மாதம் தோறும் EMI முறையில் அதை திருப்பிச்செலுத்தலாம்.