TamilSaaga

அட!! சிங்கப்பூரில் இத்தனை அழகான பீச் இருக்கா?? இதில் நீங்க போன பீச் இருக்கானு பாருங்க?

சிங்கப்பூர் என்றதும் அதன் அழகான நகர வடிவமைப்பு, கட்டிடங்கள் மற்றும் தொழில் சார்ந்த வாய்ப்புகள் நினைவுக்கு வரும் என்றாலும் சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா தளங்களை நினைவுக் கூறாமல் இருக்க இயலாது. அதிலும் இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரைகள் என்றால் கேட்க வேண்டுமா என்ன? கடல் அலைகளின் சப்தத்தில் நமது மனஅலைகள் சற்று ஓயும் போது, வருடும் இதமான குளிர்காற்று, சுடாத சூரிய ஒளி, பஞ்சுமெத்தை போன்ற மணல் போன்றவை கடற்கரைகளுக்கு நம்மை கிட்டத்தட்ட அடிமையாக்குபவை எனலாம். அத்தகைய அழகிய மனதை மயக்கும் சிங்கப்பூரின் சிறந்த கடற்கரைகள் பற்றி இப்பதிவில் காண்போம்

Sentosa Island Beach

சிங்கப்பூரின் கடற்கரைகளில் தவிர்க்க இயலாத கடற்கரை என்றால் அது Sentosa Island Beach ஆகும். இந்த தீவானது 2 கிமீ (1.2 மைல்) க்கும் அதிகமான கடற்கரையைக் கொண்டுள்ளது, இது பலவான் கடற்கரை, சிலோசோ கடற்கரை மற்றும் தஞ்சோங் கடற்கரை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவைகள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வாங்கப்பட்ட மணலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயற்கை கடற்கரைகள் என்றாலும், ஒவ்வொன்றும் அழகிலும் நம்மை மகிழ்விப்பதிலும் இயற்கை கடற்கரைகளை மிஞ்சுபவை எனலாம். இங்கிருக்கும் பிரத்தியேக பீச் கிளப் மற்றும் வாட்டர் கேமிங் போன்ற வசதிகள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் சென்று மகிழ ஏற்றவை.

East Coast Park Beach

185 ஹெக்டேர் (460 ஏக்கர்) பரப்பளவு உடைய East Coast Park சிங்கப்பூரின் மிகப் பெரிய பூங்காவாகும். மேலும் இது முழுவதுமாக மனிதனால் உருவாக்கப்பட்ட கடற்கரை ஆகும். உங்களுக்கு Cycling பிடிக்குமானால் நீங்கள் தவறாமல் செல்லவேண்டிய இடம் இதுவாகும். மேலும் இந்த 15 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் Barbecue pits உணவு மையங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளுக்கான வசதிகள் இருப்பது கூடுதல் சிறப்பு.

Changi Beach Park

இது சிங்கப்பூரின் வடகிழக்கில் அமைந்துள்ள கடலோர பூங்காவாகும். 28 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த பூங்கா சிங்கப்பூரின் பழமையான பகுதிகளில் ஒன்றாகும். சாங்கி முனையம் தொடங்கி சாங்கி பெர்ரி சாலை வரை சுமார் 3.3 கிலோ மீட்டார் தொலைவிற்கு இந்த பூங்கா அமைந்து இருக்கிறது. இக்கடற்கரை இதன் இயற்கை காட்சிகளுக்கு பெயர் போனது குறிப்பாக சூரிய அஸ்தமனம் காண்போரை வசீகரிக்கும் எனலாம். மேலும் இங்கு fishing, jogging, camping செய்து மகிழலாம்.

Punggol Beach

சிங்கப்பூரின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள புங்கோல் கடற்கரை அதன் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. முன்பொரு காலத்தில் ஏராளமான பன்றி பண்ணைகள் நிறைந்த இந்த பகுதியானது கடைசியாக 1990 இல் மூடப்பட்டு  இப்போது அதன் அழகிய இயற்கைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறது.

புங்கோல் என்ற பெயர் ஒரு சுவாரஸ்யமான மலாய் வம்சாவளியைக் கொண்டுள்ளது. இதற்கு “பழ மரங்களின் கிளைகளில் குச்சிகளை வைத்து பழங்களை தரையில் வீழ்த்துவது” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பழங்கள் சேகரிப்பதற்கான மையமாக இப்பகுதியின் கடந்த காலத்தை இது குறிப்பிடுகிறது.

இக்கடற்கரையின் மென்மையான மணலில் பாறாங்கற்கள் தனித்துவமாக அமைந்திருப்பது, அழகிய மற்றும் கலைநயமிக்க இடமாக இதனை மாற்றியுள்ளது. உங்களுக்கு புகைப்படக்கலை பிடிக்கும் என்றாலும் , இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுடன் நடைபயிற்சி மேற்கொள்ள பிரியப்படுபவர் என்றாலும் நீங்கள் செல்ல வேண்டிய கடற்கரை புங்கோல் ஆகும்.

Coney Island Beach

சிங்கப்பூரின் புரூக்ளினின் தெற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள கோனி தீவு, ஒரு சிறந்த  கோடைகால இடமாகும். இக்கடற்கரை இதன் இயற்கை காட்சிகள், அரிய வகை உயிர் வாழினங்கள் மற்றும் பறவைகளுக்கு பெயர் பெற்றது. நகர்புற பரபரப்பிலிருந்து சற்று விலகி ஓய்வாக அமைதி விரும்புபவர்கள் தாராளமாக இங்கு செல்லலாம்.

Sembawang Beach

இக்கடற்கரை சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சிங்கப்பூரில் எஞ்சியிருக்கும் சில இயற்கை மணல் கடற்கரைகளில் செம்பவாங் கடற்கரையும் ஒன்று ஆகும். செம்பவாங் என்ற பெயர் செம்பவாங் என்ற மரத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. செம்பவாங் அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்காக அறியப்படுகிறது. இங்கு பார்வையாளர்கள் காலனித்துவ கால இராணுவ கட்டிடங்களின் எச்சங்களை காண இயலும். நீண்ட நடைப்பயிற்சி மற்றும் கடற்கரை மணலில் ஓய்வெடுக்க சிறந்த இடம் செம்பவாங் ஆகும்.

Lazarus Beach

சிங்கப்பூரின் தெற்கே அமைந்திருக்கும் அமைதியான மற்றும் அழகிய இந்த லாசரஸ் தீவு, புலாவ் செகிஜாங் பெலேபா என்றும் அழைக்கப்படுகிறது. இது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தீவுகளுக்கு சென்று புத்துணர்ச்சி பெற விரும்புவோரின் விருப்பமான இடமாகும். இது சிங்கப்பூரில் இருந்து சுமார் 6.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவில் தனியார் ferry boats அனுமதிக்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும். இக்கடற்கரையானது அதன் தூய்மையான வெண்மணல் மற்றும் தண்ணீருக்கு சிறப்பு பெற்றது. மேலும் சூரியக்குளியல், நீச்சல் விரும்பவர்களின் தேர்வாக லாசரஸ் கடற்கரை உள்ளது.

அடிக்கும் கோடையில் அணைக்கும் குளிர்ச்சியை விரும்பாதவர்கள்  நிச்சயம் இல்லை எனலாம். அதிலும் அதிக செலவின்றி குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கோடையை மகிழ்வாக கழிக்க சிறந்த இடம் கடற்கரைகள் தவிர வேற என்ன இருக்க முடியும். நீங்களும் முயற்சிக்கலாமே!!

Related posts