100 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கொரோனவை போன்ற ஒரு பேரழிவு நடப்பதாக நம்மப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் இந்த பெருந்தொற்று காரணமாக பல நாடுகள் மற்றும் தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
இந்நிலையில் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து முழுமையாக மீள ஆசிய விமான சேவை நிறுவனங்களுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ஜெட் எரிபொருளை உருவாக்கவும் அதனை சுத்திகரிப்பாளர்களுக்கும் கடுமையான தலைவலியை வழங்கி வருகின்றது இந்த சூழல்.
ஆசியாவில் உள்ள சர்வதேச விமானப் பயணம் இந்த வைரஸுக்கு முந்தைய நிலைகளை அடைய 2024 ஆண்டு வரை தேவைப்படும் என்று கூறப்படுகிறது. சில நாடுகளில் குறைந்த அளவினை தடுப்பூசி வழங்கப்படுவதும், அதனால் அந்த நாடுகளில் தொடரும் கடினமான லாக் டவுன்களும் இந்த சிக்கலுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
தொற்று பரவல் காரணமாக தொற்று அதிகம் உள்ள நாடுகளுடன் எல்லைகளை மூடும் நிலை ஓராண்டை கடந்து இன்றளவும் நீடித்து வருகின்றது. அண்மையியல் சிங்கப்பூர் அரசு மியான்மார் மக்கள் சிங்கப்பூர் வர தீவிர கட்டுப்பாடுகளை விதித்தும் குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவும் 16 மாதங்களுக்கு மேலாக தங்களுடைய பன்னாட்டு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில் ஆசியா விமான சேவை என்பது தொற்று பரவலுக்கு முன்பு இருந்த நிலையை எட்டுவதற்கு சுமார் 3 ஆண்டுகளால் தேவைப்படும் என்பது பல அறிஞர்களின் கருத்தாக உள்ளது.