இந்த நொடி வரை சிங்கப்பூரின் மிக உயரம் கட்டிடம் எது தெரியுமா?
சிங்கையின் மாபெரும் கமெர்ஷியல் ஏரியாவான Downtown Core-ல் அமைந்துள்ள Guoco Tower தான்.
283.7 மீ (931 அடி) உயரத்துடன், இது தற்போது சிங்கப்பூரின் மிக உயரமான கட்டிடமாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக UOB பிளாசா, ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ் மற்றும் ரிபப்ளிக் பிளாசா ஆகியவை இணைந்து வைத்திருந்த சாதனையை முறியடித்து, கம்பீரமாக இன்று வகை முதலிடத்தில் இருந்து வருகிறது.
Floor எண்ணிக்கை – 65
Floor area – 158,000 m2 (1,700,000 sq ft)
Lifts/elevators – 45
என்று இதன் கட்டமைப்பு காண்போரை வியக்க வைக்கும்.
இந்நிலையில், மிக விரைவில் இந்த Guoco Tower தனது முதலிடம் எனும் அந்தஸ்தை இழக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஆம்! Tanjong Pagar-ல் அமைந்துள்ள AXA Tower இடத்தில் ஒரு மாபெரும் புதிய கட்டிடம் ஒன்று எழுப்பப்பட உள்ளது. ALIBABA நிறுவனமும் Perennial Holdings தலைமையிலான நிறுவனங்களும் இணைந்து இந்த கட்டிடத்தை எழுப்ப உள்ளன.
ALIBABA நிறுவனம் பற்றி இதுவரை தெரியாதவர்களுக்காக இந்த தகவல்… இன்றைய தேதிக்கு e-commerce, retail, Internet மற்றும் technology என்று அனைத்து ஏரியாவில் கலந்து கட்டி அடிக்கும் உலகின்.நம்பர்.1 சீன நிறுவனம் தான் இந்த அலிபாபா. உலகம் முழுவதும் இவர்கள் கை வைக்காத இடமும் இல்லை, கால் வைக்காத தடமும் இல்லை.
சிங்கப்பூரின் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையம் (URA), இந்த கட்டிடத்தை அதிகபட்சமாக 305 மீட்டர் உயரத்திற்கு கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், Guoco Tower-ன் சாதனை முறியடிக்கப்பட உள்ளது.
இந்த கட்டிடத்திற்காக முன்மொழியப்பட்ட திட்டத்தில் மொத்தம் 63 கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடியிருப்புகள், அலுவலகங்கள், உணவகங்கள் என்று அனைத்தும் இடம் பெற்றிருக்கும். திட்டத்தில் 4 basement levels இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 2028ம் ஆண்டுக்குள் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறக்கப்படும் நாளன்று, சிங்கப்பூரின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையுடன் இது திகழப்போகிறது.