சிங்கப்பூரில் ஆளில்லா டாக்ஸியை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர அரசு பரிசீலனை செய்து வருகின்றது. இது தொடர்பாக சிங்கப்பூரின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டார விமான போக்குவரத்து ஆணையங்கள் இணைந்து ஏர் டாக்ஸி,டிரோன் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
வருங்காலங்களில் இத்தகைய வாகனங்களின் சேவை அதிகரிக்க கூடும் என்பதால் இவற்றை நிர்வகிக்கும் பொருட்டு 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு நிலையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இது குறித்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சீனா, ஜப்பான் முதலான 17 ஆசிய பசுபிக் நாடுகளின் பிரதிநிதிகள், 24 தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தொடர்பான அதிகாரிகள் பங்கேற்று கூட்டம் நடத்தினர்.
இனிவரும் காலங்களில் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக இருக்கும் பொழுது ஏற்படும் டிராபிக் போன்றவை வான்களில் பறக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் அதற்குரிய போக்குவரத்து விதிமுறைகளை உருவாக்குவது கட்டாயம் என்ற நோக்கத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. மேலும் வானூர்தி வாகனங்களில் நாட்டின் பாதுகாப்பு மடங்கியுள்ளதால் இதுகுறித்து கவனமாக ஒவ்வொரு விதிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் இது குறித்து ஏற்கனவே மற்ற நாடுகள் உருவாக்கியுள்ள விதிமுறைகளையும் கருத்தில் கொண்டு புதிதாக விதிமுறைகளை உருவாக்கப்படும் எனவும் திட்டம் இடப்பட்டுள்ளது.