TamilSaaga

BREAKING: சிங்கப்பூர் டூ “Centre of Tamil Nadu” – நீங்க ஆஃபிஸ் முடிச்சிட்டு ரிலாக்ஸா சாங்கி ஏர்போர்ட் வரலாம் – “பிரைம் டைமில்” விமான நேரத்தை மாற்றிய Air India Express!

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர்களுக்கு, இந்த செய்தி நிச்சயம் நல்ல செய்திதான்.

ஆம் இதுநாள் வரை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 6 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமானத்தை இயக்கி வந்தது. இந்நிலையில், தற்போது தனது நேரத்தை மாற்றியுள்ளது.

அதன்படி, வரும் அக்.31ம் தேதி முதல் தினம் இரவு 9.45 மணிக்கு விமானம் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு கிளம்பும் விமானம், திருச்சிக்கு இரவு 11.25 மணிக்கு வந்து சேரும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் TOTO லாட்டரி.. தீபாவளி பரிசாக தனி ஆளாக “16 கோடி” வென்ற தங்க மகன்.. வாழ்க.. வாழ்க!

இதில், நேரம் மாற்றம் என்பது பெரிய விஷயமல்ல. ஆனால், அவர்கள் புதிதாக நிர்ணயித்திருக்கும் நேரம் கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இரவு 9.45 மணி என்பது, ஊழியர்கள் அலுவல பணியை முடித்துவிட்டு, தங்குமிடத்திற்கு சென்று தங்கள் Luggage எடுத்துக் கொண்டு ஏர்போர்ட் வருவதற்கு வசதியாக உள்ள நேரமாகும். இரவு 11.25 மணிக்கெல்லாம் திருச்சி சென்றுவிடுகிறது.

இதுநாள் வரை இருந்த காலை 6 மணி என்பது, கிளம்புவதற்கு சற்று சிக்கலான நேரமாக இருந்தது. ஏர்போர்ட்டுக்கு அதிகாலை 3 மணிக்கெல்லாம் வரவேண்டும்.

தற்போது இந்த சிக்கலை களையும் நோக்கில், நேரம் ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரும் அக்.31ம் தேதி முதல் இந்த நேரம் மாற்றம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts