சிங்கப்பூரில் உணவு ஆர்டர் எடுக்கும் புதிய ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாய லேபார் குவாட்டர் கடைத்தெரு பகுதியில் பிரபல கிராப் நிறுவனம் தற்போது இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A.H.B.O.I என்று அழைக்கப்படும் இந்த ரோபோ கிராப் ஓட்டுனர்களின் வேலையை எளிதாகும் என்று இந்த ரோபோவின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு ஆர்டர் செய்ய நினைக்கும் மக்கள் இந்த ரோபோவிடம் ஆர்டர் கொடுக்கலாம்.
மக்களிடம் இருந்து உணவு ஆர்டர்களை பெற்று அருகில் உள்ள ஓட்டுநருக்கு இந்த ரோபோ தகவல் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் இந்த சேவை முதன்முதலில் அறிமுகமாகி உள்ளது.
மக்களிடையே குறிப்பாக சிறு குழந்தைகள் மத்தியில் இந்த ரோபோ மனிதன் பெரும் வரவேற்பை பெறுவார் என்று நம்பப்படுகிறது. தற்போது இந்த சேவை பாய லேபார் குவாட்டர் கடைத்தெரு பகுதியில் பி2 தளத்தில் வழங்கப்படுகிறது.