சிங்கப்பூரின் ECP எனப்படும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே சாலையில் கடந்த செப்டம்பர் 22 புதன்கிழமை அன்று ஒன்றுன் பின்புறம் ஒன்றாக சுமார் 8 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் அங்கிருந்து சிகிசைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்துக்கு செல்லும் பாதையில் ECP சாலையில் 7 கார் மற்றும் 1 டாக்சி ஆகியவை தொடர்புடைய ஒரு விபத்து பற்றி காலை 8.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் என்ன்வென்பது பற்றி விசாரணை நடந்துவரும் வேலையில் சாலையின் 2ம் தளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டி போக்குவரத்து ஆணையம் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.