TamilSaaga

8 வயது மகள் கொலை.. கைது செய்யப்பட்ட தாய் – சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

சிங்கப்பூர் கெய்லாங்கில் 8 வயது மகள் இறந்த பிறகு அவளை கொலை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்.10) எட்டு வயது மகளின் மரணத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 35 வயது பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 11.40 மணியளவில் கெய்லாங் லோரோங் 31 இல் ஒரு குடியிருப்பு பிரிவில் நடந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அங்கு சிறுமி பல காயங்களுடன் அசைவில்லாமல் கிடந்தது தெரியவந்தது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவள் சுயநினைவில்லாமல் இருந்தாள் மேலும் மதியம் 12.45 மணியளவில் இறந்துவிட்டாள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் அவரது தாயார் கைது செய்யப்பட்டார். அவள் மீது புதன்கிழமை கொலைக் குற்றம் காரணமாக விசாரிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணை மனநல பரிசோதனைக்காக நீதிமன்ற காவலில் வைக்குமாறு போலீசார் கோரியுள்ளனர்.

கொலை குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Related posts