சிங்கப்பூரில் ஒரு லாரி டிரைவர் T வடிவ சந்திப்பை கடக்க முயன்றபோது தனது வண்டியின் வேகத்தை குறைத்தார், ஆனால் வாகனத்தை நிறுத்தவில்லை. இதனால் அந்த சமயம் அப்பகுதி வழியே நடந்து சென்று பாதசாரிகள் நடைபாதையில் ஏறவிருந்த பெண் மீது லாரி மோதியது. அந்த வாகனம் Or Cheng Kim என்ற 52 வயது பெண் மீது மோதியது, பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு தலையில் ஏற்பட்ட காயங்களால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.
கன் லியான் மின் என்ற 70 வயது ஓட்டுநருக்கு இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு எட்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், முன்பள்ளி ஆசிரியரின் உதவியாளரான திருமதி ஓர், தனது மகனை ஆச்சரியப்படுத்தவும், அவரது O-லெவல் முடிவுகளைக் கொண்டாடவும், Shushiகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகனின் வெற்றியை கொண்டாட சென்ற தாய்க்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை, இந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது, அப்போது கன் என்ற அந்த 70 வயது ஓட்டுநர் தனது தலையைத் குனிந்து நின்றார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றது. வலதுபுறம் திரும்புவதற்கு முன் அவரது லாரி மெதுவாகச் சென்று சாலையைக் கடக்கும்போது குடை பிடித்திருந்த பெண் மீது மோதியதையும் CCTV காட்சிகள் காட்டியது. கடந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி இரவு 8.30 மணியளவில், ஜுரோங் வெஸ்டில் உள்ள யுங் குவாங் சாலை மற்றும் யுவான் சிங் சாலையின் சிக்னல் இல்லாத T-சந்தியில் கன் லாரியில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
விபத்து நடந்தவுடன் Gan போலீசை அழைத்தார் மற்றும் Ms Or மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் மோட்டார் வாகனம் மோதியதில் தலையில் ஏற்பட்ட காயங்களால் கடந்த ஆண்டு ஜனவரி 15 அன்று இறந்தார். கானின் வழக்கறிஞர், ஃபெர்வென்ட் சேம்பர்ஸைச் சேர்ந்த திரு கிளாரன்ஸ் லூன், இந்தச் சம்பவத்தை துரதிர்ஷ்டவசமானது என்றும், விபத்து நடந்த நேரத்தில் கனமழை பெய்து இருட்டாகவும் இருந்தது என்று குறிப்பிட்டார்.