சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற வேலை இட விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. துவாஸ் நோக்கி செல்லும் விரைவு சாலையில் இந்தியாவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஊழியர் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். எனவே வேலை செய்யும் பொழுது போக்குவரத்து ஆணையத்தின் நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு மனிதவள அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இதே போன்று கட்டிடப் பணி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற மற்றொரு விபத்தில் பங்களாதேஷைச் சேர்ந்த 41 வயது ஊழியர் உயிரிழத்தார். எனவே அந்த நிறுவனத்தின் கட்டிட பணியினை உடனே நிறுத்துமாறு மனிதவள அமைச்சகம் தடை விதித்தது. இது குறித்து சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் கூறும் பொழுது இந்த வருடத்தில் இதுவரை 33 விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாடு ஊழியர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். எனவே நிறுவனத்தில் எவ்வளவு தான் வேலை இருந்தாலும் உங்களது உயிர் முக்கியம் என்பதை நினைவில் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடியுங்கள்.