நமது சிங்கப்பூர் தீவே முழுவதையும் பசுமையாக மற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது நமது அரசு. இதன் சில படிகளாக அண்மைக்காலமாக சிங்கப்பூர் அரசு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. இந்நிலையில் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) முதல் பயணிகள் சேவைக்காக 20 வேகமாக சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய மின்சார பேருந்துகளின் வரவு படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
LTA எனப்படும் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) கடந்த 2018ல் மூன்று சப்ளையர்களிடமிருந்து 50 மில்லியன் டாலர்களுக்கு வாங்கிய 60 மின்சாரப் பேருந்துகளில் இது இறுதிப் பகுதியாகும். இந்த புதிய மின்சார பேருந்துகள் ST Engineering Mobility Services நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
ஒரு தளம் மட்டுமே கொண்ட சிங்கப்பூரின் முதல் மூன்று கதவு கொண்ட பேரூந்துகளாக இவை விளங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 83 பேருக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் 38, 40, 176 மற்றும் 976 வழித்தடங்களில் செயல்படுத்தப்படும்.
ப்ளக் -இன் சார்ஜிங் வசதிகளை பயன்படுத்தும் முந்தைய 40 மின்சாரப் பேருந்துகளைப் போலல்லாமல், இந்தப் புதியவை அனைத்தும் பான்டோகிராஃப் சார்ஜர்களைப் பயன்படுத்தும் – அல்லது மேல்நிலை சார்ஜர்கள் பயன்படுத்தும். இது வேகமான சார்ஜிங்கை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இந்த பேருந்துகள் 130 கிமீ வரை பயணிக்கும் திறன்கொண்டது.