சிங்கப்பூரை பொறுத்தவரை தேவைக்கேற்ப கட்டப்பட்டு விற்கப்படும் வீடுகள் BTO என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள தேவைக்கேற்ப கட்டப்பட்டு விற்கப்படும் வீடுகளில் எண்ணிக்கையானது இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் வீடுகளை விட அதிகமாக இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மோண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு மொத்தமாக 17 ஆயிரம் வீடுகள் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் மட்டுமின்றி உலக அளவில் அண்மைகாலமாக நோய் பரவல் காரணமாக கட்டுமான தொழில் என்பது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனால் ஏற்பட்ட தாமதத்தை ஈடு செய்ய அடுத்த 3 ஆண்டுகளில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை பெருவாரியான அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதா என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர், அண்மைக்காலமாக சிங்கப்பூரில் இளம் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுடைய தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டிருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.