TamilSaaga

சிங்கப்பூரில் காணாமல் போன சிறுவன் ஆகாஷ் : நெற்றியில் திருநீர்.. கள்ளம்கபடம் இல்லாத முகம் – கண்டுபிடித்துத் தர “தமிழ் சாகா சிங்கப்பூர்” வாசகர்கள் இணைந்து செயல்படுவோம்

சிங்கப்பூரில் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன 11 வயதுச் சிறுவன் எங்கே இருக்கிறான் என்பது குறித்து தகவல் கிடைத்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பி. ஆகாஷ் என்ற அந்த சிறுவன் கடைசியாக கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 4) ஹூகாங் அவென்யூ 7ல் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையை கிளப்பிய சிங்கப்பூர் தம்பதி : தவறான முறையில் Tesla காரில் Auto Pilot பயணம்? ஆனால் அது சட்டப்படி குற்றம்

இந்த தகவலை இன்று வியாழன்று (ஏப்ரல் 7) வெளியிட்ட அறிவிப்பில் போலீசார் தெரிவித்துள்ளனர், சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனே 1800-255-0000 என்ற சிங்களோ போலீசாரின் ஹாட்லைனை அழைக்கவும் அல்லது ஆன்லைனில் தகவல்களை சமர்ப்பிக்கவும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும்
மக்கள் தரும் தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இதுபோன்ற பல காணாமல் போன வழக்குகளில் மக்களின் உதவியால் போலீசார் பலரை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் காணாமல் போனதிலிருந்து அவனது சொந்தங்கள் மிகுந்த வேதனையில் வாடி வருகின்றனர். ஆகையால் பொதுவெளியில் இந்த சிறுவனை யாரேனும் பார்த்தல் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts