TamilSaaga

சிங்கப்பூரில் மேலும் 1 சதவீதம் உயரும் ஜி எஸ் டி… வெளிநாட்டு ஊழியர்கள் வரி உயர்வு இல்லாமல் பொருள்களை எங்கு வாங்கலாம்?

சிங்கப்பூரில் ஜிஎஸ்டி பற்றிய முக்கிய அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது. ஜனவரி 2024 ஆம் ஆண்டிலிருந்து அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி ஆனது மேலும் 1 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் ஃபேர் பிரைஸ் கடையில் பொருட்களை வாங்குவோர் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என ஃபேர் பிரைஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏனென்றால் பல அத்தியாவசிய பொருட்களுக்கான 1 சதவீதம் வரி உயர்வினை ஃபேர் பிரைஸ் கடை ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளது. திடீரென்று விதிக்கப்பட்ட வரி உயர்வானது பொது மக்களை பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஃபேர் பிரைஸ் நிர்வாகம் இதனை அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையானது 2024 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 8 விழுக்காட்டில் இருந்த ஜிஎஸ்டி ஆனது 9 விழுக்காடாக அதிகரிக்க உள்ளது. பொதுமக்கள் முக்கியமாக பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்கள், உள்நாட்டு தயாரிப்புகள், பழங்கள், காய்கறிகள் இறைச்சிகள், நோட்டு புத்தகங்கள், சலவைப் பொருட்கள் போன்ற 500 பொருட்களுக்கான ஒரு சதவீதம் ஜிஎஸ்டியை ஃபேர் பிரைஸ் கடைஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளது. எனவே சிங்கப்பூரில் குறைவான ஊதியம் வாங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஷேர் பிரைஸ் கடைகளில் வாங்கினால் ஒரு சதவீதம் வரி உயர்வில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

Related posts