சிங்கப்பூரில் SPass ஊழியராக நீங்க வேலை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு எக்கச்சக்கமான புதிய அறிவிப்புகளை MOM எனப்படும் சிங்கை மனிதவளத்துறை அறிவித்துள்ளது. அதுகுறித்த முக்கிய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
டிப்ளமோ அல்லது டிகிரி வைத்து அதன்மூலம் சிங்கப்பூர் வரும் ஊழியர்களுக்காக இருப்பது தான் SPass. கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட கோட்டா பிரச்னையால் சிங்கைக்கு SPass அப்ரூவல் குறைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், SPass ஊழியர்களுக்கான சம்பளம், லெவி மற்றும் கோட்டாக்களில் ஏகப்பட்ட மாற்றங்களை MOM அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு:
SPass வைத்திருக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது மூன்று விதங்களில் உயர்த்தப்பட இருக்கிறது. அதன்குறித்த முக்கிய விவரங்கள்
Sectors | 1 செப் 2022 பிறகு சமர்ப்பிக்கப்பட்ட புதிய விண்ணப்பங்களுக்கும், புதுப்பித்தல்களுக்கு 1 செப் 2023 முதல் சமர்பிக்கும் விண்ணப்பிங்களுக்கும் | 1 செப் 2023 பிறகு சமர்ப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்களுக்கும், புதுப்பித்தல்களுக்கு 1 செப் 2024 முதல் சமர்பிக்கும் விண்ணப்பிங்களுக்கும் | 1 செப் 2025 பிறகு சமர்ப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்களுக்கும், புதுப்பித்தல்களுக்கு 1 செப் 2026 முதல் சமர்பிக்கும் விண்ணப்பிங்களுக்கும் |
Financial துறை தவிர மற்ற அனைத்துக்கும் | $3,000 (23 வயது இருக்கும் போது படிப்படியாக இந்த சம்பளம் அதிகரிக்க வேண்டும். 45 வயது இருக்கும் போது $4,500 இருக்க வேண்டும்) | குறைந்தபட்சம் $3,150 (இறுதிப்படுத்தப்பட வேண்டும்) | குறைந்தபட்சம் $3,300 (இறுதிப்படுத்தப்பட வேண்டும்) |
Financial துறை | $3,500 (23 வயது இருக்கும் போது படிப்படியாக இந்த சம்பளம் அதிகரிக்க வேண்டும். 45 வயது இருக்கும் போது $5,500 இருக்க வேண்டும்) | குறைந்தபட்சம் $3,650 (இறுதிப்படுத்தப்பட வேண்டும்) | குறைந்தபட்சம் $3,800 (இறுதிப்படுத்தப்பட வேண்டும்) |
நடைமுறையில் உள்ள உள்ளூர் APT ஊதியத்தின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்ட தகுதிச் சம்பளம் நடைமுறைப்படுத்தப்படும் தேதிக்கு ஏற்றவாறு அறிவிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..
SPass Levy:
மேலும் Tier1 லெவி தொகை செப்டம்பர் 1 2023ல் இருந்து $450 முதல் $550 சிங்கப்பூர் டாலராக இருக்கப்பட வேண்டும். 2025 செப்டம்பர் 1க்கு பின்னர் $550 முதல் $650ஆக இருக்க வேண்டும். Tier 2 SPass வைத்திருப்பவர்களுக்கான லெவி தொடர்ந்து $650 ஆக இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
SPass கோட்டா:
SPass கோட்டாக்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 18% சதவீதமாக இருந்த SPass கோட்டா எண்ணிக்கை 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது Manufacturing, Construction, Marine shipyard மற்றும் Process துறைகளுக்கு மட்டும் தான். சர்வீஸ் துறையின் கோட்டாக்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.