சிங்கப்பூர் தேசிய தினம், குறிப்பாக கூறினால் சிங்கப்பூரின் சுதந்தர தினம். 1965-ல் மலேசியாவில் இருந்து தனி நாடாக பிரிந்த தினம். இந்த நாளை மக்கள் மிக பிரம்மாண்டமா கொண்டாடுவாங்க. நாட்டோட முப்படைகள் பிரம்மாண்டமான அணிவகுப்புகளையும் நடத்துவாங்க. அந்த அணிவகுப்புகளை மக்கள் பார்த்து வியக்கும் விதத்துல நடத்தி முடிப்பாங்க. இந்த வருடம் சிங்கப்பூர் தேசிய தினம் கொண்டாடப்படும் பொழுது அணிவகுப்புகளைக் காண மக்கள் விண்ணப்பிக்கலாம் என NDP நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சிங்கப்பூர் தேசிய தினம் ஆகஸ்ட் மாதம் 9-ம் நாள் நடைபெறும். அப்பொழுது முப்படைகளின் அணிவகுப்பு காட்சிகள் நடக்கும். அதை NDP ஏற்று நடத்தும். (NDP – National Day Parade).
இந்த வருடம் இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களுக்கு புதிய சில விதிமுறைகளை NDP நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் முன்பதிவு செய்து இந்த அணிவகுப்பில் பங்குகொள்ளலாம். ஏறத்தாழ 27000 பேர் பங்குகொள்ளும் விதத்தில் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் கருப்பொருள் “Together, As United People” என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பாடகரான Benjamin Kheng இந்த விழாவின் கருப்பொருளுக்கான பாடலை இசைக்கவுள்ளார். சிங்கப்பூர் படைகளின் இந்த அணிவகுப்பு Marina Bay Area மற்றும் Padang பகுதிகளில் அரங்கேறவுள்ளது.
www.ndp.gov.sg என்ற இணையதளத்தில் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
இதற்கான விவரங்களும் விதிமுறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்யும் மக்கள் எந்தவிதமான Scam-களிலும் சிக்காமல் இருக்க இந்த விதிமுறைகளை NDP வகுத்துள்ளது.
• அணிவகுப்பில் கலந்துகொள்ள முன்பதிவுகள் வருகிற மே 27 மதியத்திலுருந்து துவங்குகிறது.
• மக்கள் தேசிய தின அணிவகுப்பு மட்டுமல்லாமல் அதன் ஒத்திகை அணிவகுப்புகளிலும் பங்கு கொள்ளலாம். அதற்கும் முன்பதிவு அவசியம்.
• மொத்தம் இரண்டு ஒத்திகை அணிவகுப்புகள் நடக்கவுள்ளன. முதலாவது ஜூலை மாதம் 27 மற்றும் இரண்டாவது ஒத்திகை ஆகஸ்ட் 3.
• முக்கிய விதிமுறையாக இதற்கான முன்பதிவுகளை செய்யும் நபர் Singpass எனப்படும் சிங்கப்பூர் அடையாள அட்டையைக் கொண்டவராக இருக்க வேண்டும்.
• Singpass அல்லாதோர் அவர்களுக்கு நம்பகமான ஆட்களிடம் கூறி அவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது ServiceSG மையங்களை நேரில் சென்று தொடர்புகொள்ளலாம்.
• ஒரு நபரால் 2,4 மற்றும் 6 நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
• இதற்கான தகவல்கள் மற்றும் விபரங்கள் ndp2024@klook.com. என்ற மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும். மற்ற எந்த மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து வரும் அறிவிப்புகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என NDP அறிவித்துள்ளது.
• இதற்கான அறிவிப்புகள் ஜூன் 21 முதல் ஜூன் 25 க்குள் அனுப்பப்படும்.
• முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய விதத்தில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. தனித்தனி தொகுப்பாகவே அமைக்கப்பட்டுள்ளன.
• அணிவகுப்பைக் காண வரும் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் என அனைவருக்கும் முன்பதிவு அவசியம்.
• அணிவகுப்பைக் காணவரும் அனைவருக்கும் LED விளக்குகள் பொருத்தப்பட்ட Wristband வழங்கப்படும்.
• இதற்கான முன்பதிவுகளுக்கு ஜூன் 10-ம் தேதி கடைசி நாள்.
• இந்த டிக்கெட்டுகள் விற்பனைக்கு அல்ல. ஒருவேளை விற்பனை செய்யப்பட்டு பிடிபட்டால் தக்க தண்டனை வழங்கப்படும் என NDP நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேசிய தினத்தன்று அணிவகுப்பைக் காண வரும் மக்கள் இதன் மூலம் ஏமாற்றப்படாமல் இருக்கவே இது போன்ற முக்கிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் மேற்கண்ட விதிமுறைகளை மனதில் கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.