TamilSaaga

‘ஆடையின்றி அலைந்த ஆடவர்’ – சுத்தியலால் அடித்த சக ஊழியருக்கு 13 மாதச் சிறை

சிங்கப்பூரில் ஒரு மீன் பண்ணையில் ஆடையின்றி நடமாடிய சக ஊழியரை தாக்கிய 35 வயது வாலிபருக்கு தற்போது 13 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாக்கிய அந்த ஆடவரும் தாக்கப்பட்ட அந்த ஆடவரும் மியான்மார் நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Saw Paing Soe Thu என்ற அந்த நபர் சுத்தியலை கொண்டு வேண்டுமென்றே தான் காயம் விளைவித்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். காயமடைந்த சக ஊழியருக்கு மூக்கிலும் நெற்றியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

லிம் சூ காங் என்ற பகுதியில் உள்ள மீன் பண்ணையில் இந்த ஆண்டு இச்சம்பவம் நடந்தது. முதல் முறை அந்த ஊழியர் ஆடையின்றி மீன் பண்ணையை சுற்றி வந்தபோது அவரை Saw Paing Soe Thu எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கையை மீறி மீண்டும் அந்த ஆடவர் அவ்வாறு செய்த நிலையில் Saw Paing Soe Thu அவரை தாக்கியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு 13 மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தினால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts