சிங்கப்பூரில் சவாலுக்காக ஆற்றை கடந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சமூகவலைதள சவாலுக்காக இது நடந்ததாக தெரிகிறது.
சிங்கப்பூரை சேர்ந்த கதிரேசன் என்ற நபர் தனது சமூகவலைதள பக்கத்தில் 1990களில் சிங்கப்பூர் ஆற்றை நீந்தி கடந்ததாக அவர் ஒரு பதிவை இட்டு இருந்தார்.
அப்போது சீனர்களின் ஏழாவது மாத இறுதிக்குள் அந்த ஆற்றை கடக்க வேண்டும் என அவருக்கு இணையத்தில் சவால் விடப்பட்டதாகவும் அதனை செய்ய வேண்டாம் என கூறியும் கதிரேசன் கேட்கவில்லை எனவும் அவரது நண்பர் திரு. ஸியே ( நண்பர் தனது பெயரை இப்படி குறிப்பிட மட்டுமே விருப்பம்) அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் நேற்று (வெள்ளிக்கிழமை) 8.45 மணிக்கு சிங்கப்பூர் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதும். பின்பு 11.45 மணியளவில் குடிமை தற்காப்பு படைக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு குழு சோதனை செய்ததில் கரையிலிருந்து சுமாத் 60 மீ தொலைவில் இறந்த கதிரேசனிம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை உறுதிபடுத்தியிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.