சிங்கப்பூரில் நடந்து வரும் சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவை சேர்ந்த அரக்கோணம் வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

சிங்கப்பூரில் கடந்த 9ந் தேதி முதல் 11ந் தேதி வரை சர்வதேச டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருக்கும் அரக்கோணம் பகுதியினை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த போட்டியில் சர்வாணி , திவாகர் தலா மூன்று போட்டிகளில் கலந்து கொண்டார்கள். அதில் திவாகர் இந்தியா ஜூனியர் பிரிவில் விளையாடி 2 தங்கப்பதக்கம் வென்றார்.

சர்வாணி இந்தியா Young ஜூனியர் பிரிவில் விளையாடி 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப்பதக்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தார்கள்.



மாணவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு கலாம் யுவி அறக்கட்டளை ஸ்பான்சர் செய்திருப்பதாக மாணவர்களின் பயிற்சியாளர் மாஸ்டர் யுவராஜ் தெரிவித்து இருக்கிறார். தமிழ்சாகா சார்பில் நாமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.