சிங்கப்பூரில் அண்மையில் டூரியன் பழத்தின் சீசன் தொடங்கியது, இதனைத் தொடர்ந்து இந்த பழங்களை விற்பவர்கள் இந்த பழங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் ஏற்கனவே இந்த பழங்களை அதிக அளவில் கொள்முதல் செய்யத்தொடங்கினர். சிங்கப்பூரை பொறுத்தவரை டூரியன் சீசன் கடந்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் பெரிய அளவில் சூடுபிடித்துள்ளது.
சந்தைகளில் இந்த பழங்கள் அதன் அளவிற்கேற்ப 10, 20 முதல் 50 டாலர் வரை விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்த பழங்கள் Marine Parade FairPrice Finestல் 1.99 டாலருக்கும் விற்பனையாகி வருவது டூரியன் விரும்பிகளுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் இருந்ததைப் போலவே இந்த ஆண்டும் விற்பனை அதிக அளவில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விற்பனை உச்சக் கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் டூரியன் பழங்களின் விளையும் கணிசமாக குறையும் என்று வியாபாரிகள் பிரபல சி.என்.ஏ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லூயிஸ் டூரியன் நிறுவனத்தின் பங்குதாரரான திரு லூயிஸ் லீ, இதுகுறித்து கூறும்போது “இந்த பருவத்தில் டூரியன் விற்பனை நல்லபடியாக உள்ளது. மலேசிய விற்பனையாளர்கள் சீனாவிற்கு இந்த பழங்களை ஏற்றுமதி செய்வதால் இவ்வாண்டு இந்த பழங்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகின்றது” என்று கூறினார்.