சமீபத்தில் நடிகர் அர்ஜீன் தனது சொந்த செலவில் ஒரு ஆஞ்சனேயர் கோயிலை கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
இந்த கோயிலானது போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் மிகச்சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.
சுமார் 20 ஏக்கர் பரப்பளவு உள்ள ஒரு தோட்டம் அதற்கு இடையே 1 ஏக்கர் பரப்பளவில் இந்த கோயிலை கட்டியுள்ளார்கள்.
சுமார் 28 அடி உயரமுள்ள இந்த ஆஞ்சநேயர் சிலையானது 200 டன் எடையில் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கல்லானது கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்டது.
28 அடி உயரம் 17 அடி அகலம் கொண்ட சிலையானது மிகப்பெரிய 22 சக்கரம் கொண்ட ட்ரக்கில் கொண்டுவரப்பட்டது.
இதில் ஆஞ்சநேயர் யோக நிலையில் அமர்ந்திருப்பதுபோல சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.