சிங்கப்பூரில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு வரையில் உணவகங்களில் 2 பேர் மட்டுமே குழுவாக அமர்ந்து உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. சமூக இடைவெளி பின்பற்றி 2 பேர் கொண்ட குழுக்களாக மேசையில் அமர அனுமதிக்கப்பட்டு இருந்தது.
வருகின்ற ஜீலை.12 முதல் உணவகங்களில் 5 பேர் கொண்ட குழுவாக மேசையில் அமர்ந்து உண்ணலாம். சமூக இடைவெளி பின்பற்றி குழுவாக உண்ண அனுமதி.
பணியிடங்களில் மீண்டும் சமூக கூட்டங்களை நடத்தலாம். இது போன்ற கூட்டங்களில் பங்கு பெறவும் 5 பேர் வரை அனுமதி அளித்துள்ளது
கடந்த வாரத்தில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை 86 ஆக இருந்தது தற்போது அது ஜீலை.5 நிலவரப்படி 28 ஆக குறைந்துள்ளது. இதனை அடுத்து இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.