TamilSaaga
Singapore Jobs

சிங்கப்பூரில் Technician பணிக்கு ஆட்கள் தேவை – பிரபல நிறுவனம் அறிவிப்பு!

சிங்கப்பூரில் பணியாற்ற பல நல்ல வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்து வரும் நிலையில், அது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். வெளிநாடுகளில் உள்ளவர்கள் மட்டுமல்ல, சிங்கப்பூரில் ஏற்கனவே பணிபுரிந்து வருபவர்களும், உரிய அனுமதியோடு பிற பணிகளில் இணைய அதிக வாய்ப்புள்ளது. சிங்கப்பூரில் வசிப்பவர்களும் தங்களுக்கான ஒரு நல்ல வேலையை தொடர்ச்சியாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள பிரபல ST Engineering நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்ற பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது. கடந்த ஜூன் 17ம் தேதி, தனது நிறுவனத்தில் பணியாற்ற உரிய பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் தேவை என்ற ஒரு விளம்பரத்தை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கப்பல் கட்டும் தளம்

சிங்கப்பூரில் உள்ள பெனோய் சாலையில் செயல்படும் கப்பல் கட்டும் தளத்தில் தான் டெக்னீஷியன் பணிக்கு ஆட்கள் தேவை என்று ST Engineering தெரிவித்துள்ளது. உலக அளவில் சுமார் 20,000க்கும் அதிகமான நபர்கள் பணி செய்யும் சிறந்த நிறுவனமாக இந்த ST Engineering திகழ்ந்து வருகிறது. கப்பல் கட்டும் தளம் என்பதை தாண்டி விமானம் உள்பட பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது இந்த நிறுவனம்.

பணியின் பெயர் : Technician

பணி செய்யும் இடம் : பெனோய், சிங்கப்பூர்

வேலையின் விவரம்

Carry out general repair and maintenance of engines onboard vessels or in workshops
Dismantle and troubleshoot for marine engine defects
Perform repair and /or replacement of engine’s components spare parts
Perform alignment checks and reassemble the engine parts
Perform testing of equipment to ensure smooth operation
Perform test run and report to superior on the job completion status

தகுதி
NTC or Higher NTC in Mechanical or Marine related field
Possess basic understanding of basic components and functions of mechanical engines or diesel engines
Able to read simple drawings and service reports
Able to use measurement tools such as Bore Gauge
Willing to work under outdoor environment on site
Willing to work shift when required
Able to work and communicate effectively in a team setting

புகழ்பெற்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை – எப்படி விண்ணப்பிப்பது?

வாரம் 5 நாள்கள் பணியாற்றும் வகையில் வேலை தரப்படும், காலை 7.25 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை இருக்கும். இந்த Technician பணிக்கு விண்ணப்பிக்க, செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். உரிய தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

Related posts