TamilSaaga
Singapore E pass

சிங்கப்பூர்: 2025-ம் ஆண்டுக்கான புதிய E-பாஸ் விதிகள் அறிவிப்பு!

சிங்கப்பூர்: 2025-ம் ஆண்டுக்கான புதிய E-பாஸ் விதிகள் வெளியீடு

சிங்கப்பூர் அரசாங்கம், வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய விரும்பினால், அவர்கள் சில குறிப்பிட்ட வேலை அனுமதி (Work Pass) வகைகளை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது சிங்கப்பூர் தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்தவும், உள்ளூர் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களை சட்டபூர்வமாக பணியமர்த்த இந்த பாஸ் அவசியம். ஒரு நிறுவனத்தினர் தங்கள் நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து தகுதி வாய்ந்த தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்றால் இந்த பாஸ்களை பெற்று தான் அவர்களை பணியில் அமர்த்தமுடியும். நிறைய வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தினர் பெற்று தரும் பாஸ் மூலம் வேலைக்கு வந்து விடுகிறார்கள்.

எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (EP ) பற்றி பார்க்கலாம், இந்த பாஸ் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். தகுதி வாய்ந்த ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற தொழிலாளர்கள் இந்த பாசின் மூலம் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரலாம். இந்த எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (EP ) மூலம் சிங்கப்பூருக்கு வருவோர் ஏதேனும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் தங்களுடைய பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அது மட்டும் அன்றே அவர்களுடைய துறைகளில் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

2025 ஆண்டில் E-pass இருக்கும் மாற்றத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்:

ஜனவரி 1, 2025 முதல் EP தகுதிச் சம்பளம் குறைந்தபட்சம் $5,600 ஆகவும், நிதிச் சேவைத் துறைக்கு குறைந்தபட்சம் $6,200 ஆகவும் இருக்க வேண்டும். இந்த திருத்தப்பட்ட EP தகுதி ஊதியம், 2026 ஜனவரி 1-க்குப் பிறகு காலாவதியாகும் EP-க்களின் புதுப்பித்தலுக்கும் பொருந்தும்.

எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (EP) இரண்டு ஆண்டுகள் வரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் அதை புதுப்பிக்க வேண்டும். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அதை புதுப்பிக்க திரும்பவும் நீங்கள் ஆவணங்களை செலுத்தி காத்திருக்க வேண்டும். உங்களுடைய பாஸ் புதுப்பிக்கப்பட்ட பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீங்கள் சிங்கப்பூரில் தங்கி பணிபுரியலாம்.

சிங்கப்பூர் எம்ப்ளாய்மென்ட் பாஸ் வைத்திருப்பவர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கைத் திறக்கலாம், சொத்தை வாடகைக்கு எடுக்கலாம் மற்றும் உள்ளூர் மருத்துவக் காப்பீட்டை வாங்கலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

 

 

2025 ஜனவரி 1 முதல் E-Pass பெற குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவாக இருக்க வேண்டும்?

(அ) $4,500
(ஆ) $5,600
(இ) $6,200
(ஈ) $7,000

Related posts