சிங்கப்பூர் மட்டுமின்றி ஆசியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமாக இருப்பது SATS food service (SFS). இந்நிறுவனம் விமான நிறுவனங்கள், பெரிய கம்பெனிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றிற்கும் உணவு தயாரித்து வழங்கும் சேவையை வழங்கி வருகிறது. சமையல் மட்டுமின்றி அயனிங், லான்டரி சர்வீஸ்களையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் சமையல் உள்ளிட்ட பல பணிகளுக்காக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 14ம் தேதி காலை 10 மணி துவங்கி, மாலை 4 மணி வரை ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆட்கள் தேர்விற்கான நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொள்ளலாம். நிரந்த பணிகளுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்கள் தேர்வு நடைபெறும் இடம் :
The Frontler CC
60, Jurong west central 3, #01-01 S(648346)
சம்பளம் விபரம் :
மாதம் 4600 சிங்கப்பூர் டாலர்கள். இது தவிர ஷிப்ட் அலவன்ஸ், இன்சன்டிவ் 500 டாலர்கள், நீண்ட கால பணி விருது, மருத்துவ மற்றும் பல் சிகிச்சை பலன்கள், சுழற்சி முறையில் பணி வாய்ப்பு உள்ளிட்டவைகளும் உண்டு.
காலி பணியிட விபரம் :
* Executive, F&B operations
* Sous Chef
* Junior sous chef
* Assistant cook/cook
* Production operator